GuidePedia

சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கி பின்னர் தலைமறைவாகியிருந்த பௌத்த மதகுருவொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
குறித்த சந்தேகநபர் 13 வயதான சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதுடன் அவரை கர்ப்பவதியாக்கியு முள்ளார். சந்தேகநபர் சூரியவெவ ரம்முதுவெவ விகாரையின் , விகாராதிபதியென தெரிவிக்கப்படுகின்றது. 
மத அனுட்டானம் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு குறித்த சிறுமி விகாரைக்குச் சென்ற வேளையில் அவரை குறித்த விகாராதிபதி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்போது சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரியவருகின்றது. 
கர்ப்பத்தை கலைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அது கைகூடவில்லையென தெரியவருகின்றது. விடயம் தெரிய வந்ததை அடுத்து பிரதேச மக்கள் அங்கு குழுமி தம் எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர். இம்மாதிரியான பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் சூரியவெவ சுகாதார அதிகாரியின் காரியாலத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சூரியவெவ சுகாதார அதிகாரி சுசந்த காரியவசம் தெரிவிக்கின்றார். குறித்த சந்தேகநபர் இவ்வாறு பல துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் என தெரியவந்துள்ளது.



 
Top