GuidePedia

நல்லாட்சி அரசாங்க அமைச்சர்கள் ஆடம்பர செலவுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் பெற்றோலியவள மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோர் பாரிய செலவில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யவுள்ளனர்.
அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் பிரதி அமைச்சர் அனோமா கமகே ஆகியோர் ஆறு கோடி ரூபா செலவில் இரண்டு பி.எம்.டபிள்யு ரக வாகனங்களை கொள்வனவு செய்யவுள்ளனர்.
வாகனங்களை இறக்குமதி செய்ய புதிய பணிப்பாளர் சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் பயன்படுத்திய நான்கு மொன்டெரோ ரக வாகனங்களும் ஒரு பி.எம்.டபி;ள்யு ரக வாகனமும் அமைச்சில் காணப்படும் நிலையில் ஆறு கோடி ரூபா செலவில் புதிதாக வாகனங்களை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வாகனங்கள் இருக்கும் நிலையில் ஆறு கோடி ரூபா செலவிட்டு புதிதாக அதி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வது பாரிய விரயமாகும் என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
பெற்றோலியத் திணைக்களத்தின் ஊழியர் பிரச்சினைகள், பவுசர் பிரச்சினைகள் போன்றவற்றைத் தீர்த்து எரிபொருள் விலைகளை குறைக்க வேண்டுமே தவிர அதி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



 
Top