GuidePedia

நல்லாட்சி அரசாங்கம் கசினோ சூதாட்டத்தை ஊக்குவிப்பதாக ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் கசினோ சூதாட்டத்தை ஆரம்பிக்கின்றது. இதுவா நல்லாட்சி? ராஜபக்ச ஆட்சியாளர்களை தோற்கடித்த மக்களுக்கு தேவை கசினோ சூதாட்டமா?
கசினோ வரியின் மூலம் கசினோ சூதாட்டம் சட்ட ரீதியானதாக்கப்படுகின்றது. கசினோ அனுமதி வரியை கடந்த அரசாங்கம் அறவீடு செய்யவில்லை.
இந்த அரசாங்கம் கசினோ மற்றும் கசினோ அனுமதி வரியை அறவீடு செய்யவுள்ளது.  அவ்வாறெனில் எப்போது கசினோ சூதாட்டம் இல்லாதொழிக்கப்படும்.
இது மூடிமறைத்து கசினோவிற்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையாகும்.
கசினோ வரி மூலம் புதிதாக கசினோ சூதாட்ட நிலையங்களை ஆரம்பிக்க அழைப்பு விடுக்கப்படுகின்றது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் வருமானம் ஈட்டாது மக்கள் மீது வரிச்சுமையை திணிக்க உள்ளது என சுனில் ஹந்துனெத்தி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.



 
Top