GuidePedia

இந்த கலப்பு அரசாங்கத்தினால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இராணுவ பிரதானிகள் விசாரணைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என்பது தமக்கு தெரியாது என ஜனாதிபதி கூறுகின்றார்.
நிதி அமைச்சர் கடன் பற்றி பேசுகின்றார். 2005ம் ஆண்டு நாம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட போது அரச கடன் 105 வீதமாகும், நாம் இந்த அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைக்கும் போது அந்த தொகை 85 வீதமாக காணப்பட்டது.
இந்த அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்ள நாடாளுமன்றில் அனுமதி கோருகின்றது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு சேவையாற்ற முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
முன்னெடுக்கப்பட்டு வந்த அபிவிருத்தியை இடைநிறுத்திவிட வேண்டாம்.
சிறுதோட்ட உரிமையாளர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.



 
Top