GuidePedia

(எப்.முபாரக்)                          
கொடுங்கோள் ஆட்சியாளர்களின் கையில் இருந்த ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி நல்லவர்களினால் நல்லாட்சியை ஏற்படுத்தி அதில் படித்த இளைஞர் யுவதிகளுக்கு அரச தொழில் வாய்ப்புகளை வழங்குவதில் பெருமிதம் அடைகின்றேன்.கடந்த காலங்களில் மாவட்டம் பார்த்து விசுவாசிகள் பார்த்தே தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டது.இந்த நல்லாட்சியில் கட்சி,இனம்,மற்றும் மதம்,பாராது வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றது என  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், காணி அமைச்சருமான எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன தெரிவித்தார்.                                     நிலஅளவை உதவியாளர் பதவிக்கான நியமனக் கடிதங்கள் முந்நூறு பேருக்கு காணி அமைச்சினூடாக செவ்வாய் கிழமை(20) மாலையில் கந்தளாய் அக்ரபோதி தேசியப் பாடசாலையில் கேட்போர் கூடத்தில் நியமனங்களை வழங்கி வைக்கும் வைபவத்திலே அவர் இதனைத் தெரிவித்தார்.                                     அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:புதிய நல்லாட்சியில் காணி அமைச்சினூடாக சிறப்பாக பயிற்சிகளைப் நிறைவு செய்த முந்நூறு பேருக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ்,சிங்கள,முஸ்லீம்,இளைஞர்களுக்கு அரச தொழில் வழங்குவது விசேடமாகும்.               கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவது நாமல் ராஜபக்ஷ என்ற தனிமனிதரே அதிகாரங்களை அண்ணன்,தம்பி,மகன்,என அனைவரும் ஆட்சி,அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு நினைத்ததை மாற்றியமைத்து வந்தார்கள்.            அதுமாத்திரமின்றி பொது மக்களின் பணங்களையும் மோசடி செய்து வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ளார்கள் இவ்வாறு ஊழல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் ஒருகாலம் வரும் அப்போது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.                அவ்வாரான ஊழல்களை மேற்கொண்டவர்களை ஆட்சியில் இருந்து இறக்கி பொது மக்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்கள்.தற்போது நல்லாட்சி மலர்ந்துள்ளது. அமைச்சர்கள் சுயாதீனமாக தங்களது சேவைகளை வழங்குவதற்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.                          எமது காணி அமைச்சினூடாக நாட்டில் குறுகிய காலத்தில் ஒன்றரை இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன, இன்னமும் வழங்க இருக்கின்றோம். அதேபோன்று அரச தொழில்கள் பெறுவோர் சிறந்த நம்பிக்கையான சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் இலஞ்ச ஊழல்களை மேற்கொண்டால் உடனடியாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்படுவர் என்றார்.          இந்நிகழ்வில் காணி அமைச்சின் செயலாளர் ஐஎச்.கே.மகாநாம,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டாக்டர் அருண சிறிசேன,அரசியல் வாதிகள், அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.   



 
Top