GuidePedia

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலிலும் தனது ஆதரவினை ஐக்கிய தேசிய முன்னணிக்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்கள் பலரும் போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு கட்சிகளும் போட்டியிட்டு இறுதியில் ஒரு தரப்பினராக செயற்படுவார்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி நிறுவனங்கள் தேசிய அரசாங்க கருத்திற்கு செல்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை, எனினும் போட்டியிட்டதன் பின்னர் தேசிய அரசாங்க முறைக்கமைய தான் செயற்பட நேரிடும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



 
Top