GuidePedia

(க.கிஷாந்தன்)

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலிபடை தோட்டம் மேற்பிரிவு பகுதியில் எஸ்.கனிஷன் என்ற மூன்று வயது சிறுவனொருவன் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.

எலிபடை தோட்டம் மேற்பிரிவு பகுதியில், 21.10.2015 அன்று காலை 9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனதையடுத்து பெற்றோர்கள் மற்றும் பிரதேசவாசிகள் தேடுதல் பணியில் ஈடுப்பட்ட போது சிறுவன் மேற்படி வீட்டின் பின்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற நிலையில் இருந்த கிணற்றில் விழுந்து கிடப்பதை அவதானித்துள்னர்.

இதனையடுத்து சிறுவனை உடனடியாக மீட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதித்த போது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




 
Top