GuidePedia

இறுக்கமான உடை அணிந்து வந்ததற்காக பாடசாலை மாணவன் ஒருவனின் சீருடையை ஆசிரியர் ஒருவர் வெட்டித் துண்டாக்கிய சம்பவமொன்று மீரிகம பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
மீரிகம டட்லி சேனநாயக்க மாதிரிப்பாடசாலையில் நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் 11ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இந்தச் சம்பவத்துக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த மாணவன் சற்று ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதன் காரணமாக பழைய சீருடையொன்று அணிந்துகொண்டு பாடசாலைக்கு வருகை தந்துள்ளார். இதனைக் கண்ட பாடசாலையின் பௌத்த நாகரீகம் தொடர்பான ஆசிரியர் மாணவனை தாக்கி, அவனது சீருடையையும் கத்திரியால் வெட்டித்துண்டாக்கியுள்ளார்.
இதன்போது மாணவனின் உடலிலும் கத்திரி பதிந்து பல இடங்களில் காயமேற்பட்டுள்ளது.
ஆசிரியரின் இந்த வெறிச் செயல் குறித்து பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை நிலையில் , மாணவனின் பெற்றோர் மீரிகம பொலிசில் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர்.



 
Top