(எஸ்.அஷ்ரப்கான்)
சாய்ந்தமருதின் முன்னணி கழகங்களான ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் மற்றும் பிளைங் ஹோர்ஸ் விளையட்டுக் கழகங்களுக்கிடையே நடைபெற்ற சினேக பூர்வ T-20 கிரிக்கட் போட்டி மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி நிறைவுபெற்றது.
நேற்று (17) சனிக்கிழமை சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றஇப்போட்டியில் நாணையச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம்நிர்ணயிக்கப்பட்ட 17 பந்து வீச்சு ஓவர்களை எதிர் கொண்டு 9 விக்கடுகளை இழந்து 135ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அணித் தலைவர் எஸ்.றிழ்வான் 27பந்துகளில் 4 ஆறு, 7 நான்கு அடங்கலாக 57 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழக அணியினர் 15 பந்து வீச்சு ஓவர்கள் முடிவில் 6 விக்கடுகளை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை காலநிலை இடமளிக்காததினால் போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவுக்கு வந்தது. இரு அணியினரும் இங்கு சிறப்பாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.