GuidePedia

மாவீரர் தினக் கொண்டாட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் 14ம் திகதி வடக்கில் ஒருசிலர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஞாபகார்த்த வைபவங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, அவ்வாறான எந்தவொரு வைபவத்துக்கும் இடமளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு தற்போது சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி தமக்கு விருப்பமான முறையில் கொண்டாட்டங்களை அமைதியான முறையில் மேற்கொள்ள முடியும்.
எனினும் சட்டவிரோதமான வகையிலோ, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான முறையிலோ எந்தவொரு வைபவமோ, நிகழ்வையோ நடத்த அனுமதிக்க முடியாது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.



 
Top