(எப்.முபாரக்)
அனுமதிப்பத்திரமின்றி போதையில் வாகனம் செலுத்திய ஒருவருக்கு குச்சவெளி நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை(22) மூன்று மாதம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நிலாவெளியைச் சேர்ந்த ஜே.எம்.யூசுப் வயது(54) என்பவருக்கே அத்சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி மது போதையில் லொறியென்றினை நிலாவெளியிலிருந்து புடவைக்கட்டு பகுதிக்குச் சென்ற போது குச்சவெளி போக்குவரத்துப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சந்தேக நபருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்றைய வழக்குத் தவணையின் போது குற்றவாளியாக இனங்கண்டு 11,000ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அத்தொகையினை செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாதம் சிறைதண்டனை விதித்து குச்சவெளி பதில் நீதிமன்ற நீதிபதி கயான் மீகஹகே உத்தரவு பிறப்பித்தார்.