GuidePedia

(TNN)
வேலுப்பிள்ளை பிரபாகரனே அவர்களின் தலைவர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கொக்கரித்து உள்ளார்கள், அப்படியாயின் அவர்கள் ஏன்  விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் கொடுக்கவில்லை? என்று வினவி உள்ளார் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல்.
இவர் கொக்குவில் பொற்பதியில் இன்று காலை நடத்தப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-
“ திம்புப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு என்று இப்போது திடீரென்று ஓதுகின்றார்கள். ஆனால் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோர் திம்புப் பேச்சு வார்த்தையை ஏற்காதவர்கள். எந்த முகத்தோடு சம்பந்தன் ஐயா இப்போது திம்புப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு என்று கூறுவார்?
நாடாளுமன்றத்தில் கடந்த பதவிக் காலத்தின்போது இவர்களின் தீர்வு என்ன? என்று கேட்கப்பட்டபோதெல்லாம் சும்மா இருந்து விட்டு, இப்போது தேர்தல் என்று வந்தவுடன் ஒரு வழியும் இல்லாமலே திம்பு என்று பேசுகின்றார்கள்.
மக்களே திம்புப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்று பேச இவர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது. ஏனென்றால் திம்புப் பேச்சுவார்த்தையின் அடித்தளமே இணைந்த வடக்கு, கிழக்கு என்பது. இவர்கள் பிரிக்கப்பட்ட வட மாகாண சபையில் தேர்தல் கேட்டு ஆட்சி அமைத்தார்கள். இதே போல பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையில் தேர்தல் கேட்டு முஸ்லிம் கட்சியுடன் சேர்ந்து அமைச்சுப் பதவிகளை பெற்றார்க;ள். பின்பு எப்படி திம்பு பற்றி இவர்களால் பேச முடியும்? ”



 
Top