புத்தளத்து முஸ்லிம் சமூகம் கடந்த 26 வருடங்களாக பெற்றுக்கொள்ள முடியாமல் போன புத்தளத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளும் சந்தரப்பம் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் அதனை இல்லாமல் செய்து இந்த நாட்டு முஸ்லிம்களின் மத கடமைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த மஹிந்த உள்ளிட் பொதுபலசேனா ஆதரவு குழுவினருக்கு வாக்குககளை பெற்றுக் கொடுக்கும் இரகசியங்கள் தொடர்பில் புத்தளம் எனதருமை மக்கள் அவதானமாக இருக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் புத்தளம் நகரில் இன்று (29) இடம் பெற்ற ஜக்கிய தேசிய கட்சிய தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டாறு கூறினார்.
புத்தளம் மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் பட்டியிலில் போட்டியிடும்,எம்.எச்எம்.நவவி,எம்.என்.எம்.நஸ்மி,அசோக வடிகமங்காவ.பைரூஸ் உள்ளிட்ட வேட்பளார்களின் வெற்றியினை உறுதிப்படுத்தும் வகையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே தேசிய தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் இங்கு பேசுகையில் கூறியதாவது –
ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை கொண்டுள்ள புத்தளம் மக்கள் தமது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாததற்கு காரணம்,கட்சி அரசியல் செய்வதும்.தனக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்பதற்காக சுயேட்சைக் குழுக்களை அமைத்து அதற்கு வாக்குகளை கேட்பதும் இதன் மூலம் வாக்குகளை பிரித்து நாம் யாரை கடந்த தேர்தலில் தோற்கடித்தோமோ,அவரை பிரதமராக்கும் பணியினை செய்கின்ற நிலையினை காணமுடிகின்றது.
எமது முஸ்லிம்கள் பட்ட அச்சுறுத்தல்கள்,ஹலால் எதிர் போராட்டங்கள் ,பெண்களின் ஹிஜாப் எதிர் பிரசாரங்கள் என அடுக்கி கொண்டே போகலாம்.இதனை எதிர்த்து நாம் போராட்டங்களை நடத்தினோம்,வடக்கில் முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்ய விளைந்த போது அதனை வில்பத்து என்று கூறி,அதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்ததை நாம் நினைவுபடுத்தவிரும்புகின்றேன்.அதற்கு எதிராக நாம் பேராட்டங்களை முன்னெடுத்தோம்.
நாம் இடம் பெயர்க்கப்பட்டு வந்த போது,எமக்கு எல்லா விதமான உதவிகளையும் செய்த மக்கள் புத்தளம் மக்கள் என்பதை நாம் மறந்து செயற்பட முடியாது.இன்று புத்தளம் மக்கள் பராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அடைந்து கொள்ளும் ஒரு சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதை இதனை தவறவிடுவோமெனில் இனியும் நாம் எமது பாராளுமன்ற பிரதி நிதியினை பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும்,
அரசியல் என்பது மக்களுக்காக இருக்க வேண்டும்,மாறாக அதை வைத்து மக்களை அடக்கி ஒடுக்கி ஆள நினைக்க கூடாது,கடந்த பிரதேச மற்றும் மாகாண சபை தேர்தல்களில் எமது கட்சி புத்தளத்தில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை,ஆனால் இந்த தேர்தல் புத்தளம் மக்களின் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் ஒன்றாகும்,சுயேட்சை அணியில் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்ல முடியாது என்பதற்கு கடந்த பல தேர்தல்கள் சான்றாக இருந்துவருகின்றது என்று கூறிய தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் சுயேட்சை அணியில் போட்டியிடும் சமூகம் சார்ந்த சிந்தனை கொண்டவர்கள் அதிலிருந்து விலகி வெற்றிபெறும் அணியுடன் இணைந்து கொள்ளுமாறும் அழைப்புவிடுக்கின்றேன்.என்றும் கூறினார்.
புத்தளம் மாவட்டத்தில் ஒட்டகச் சின்னத்தில் சிலாபத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் வேட்பாளர் நியாஸ்தீன் இன்று ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும்,பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் ஜக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.