GuidePedia

இந்தியா மற்றும் சீனாவுடன் நட்புக் கொள்ளும் வகையில் வெளிநாட்டுக் கொள்கையை ஏற்படுத்தவுள்ளதாக மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இன்று (28) வெளியிடப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்காத நிலையில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. 
இதன்படி இந்தியா மற்றும் சீனாவுடன் பொருளாதார உறவுகளை கூட்டமைப்பு அரசாங்கம் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கத்தைய நாடுகளின் உறவுகள் தொடர்பில் இந்த விஞ்ஞாபனத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
எனினும் இலங்கையின் இறைமையில் மேற்கத்தைய நாடுகள் தலையிட அனுமதிக்கப்படமாட்டாது என்றும் மேற்கத்தைய மனித உரிமைகள் சபையிடம் இருந்து படையினரை பாதுகாப்பது என்றும் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு 13வது அரசியலமைப்புக்குள் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் மஹிந்த ராஜபக்ச 13வது சரத்துக்கு அப்பால் சென்று தீர்வு என்று கூறிவந்த வாக்கியம் இதில் உள்ளடக்கப்படவில்லை.
இலங்கையின் அனைவருக்கும் மதச்சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும். அத்துடன் பெருந்தோட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு வீடமைப்புகளுக்கும் கூட்டமைப்பு விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.



 
Top