GuidePedia

பொதுபல சேனா அமைப்பு மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட யாரும் ஒருபோதும் முஸ்லிம் மக்களை தாக்கவில்லை என அவ் அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திர் அமைச்சர் கே.கே.டீ.எஸ். குணவர்தனவினால் பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம் மக்களை தாக்கியதாக கூறிய கருத்திற்கு திலந்த விதானகே கண்டனம் வெளியிட்டதோடு, பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் சவால் விடுத்துள்ளார்.

நாட்டின் அமைச்சர் என்ற ரீதியில் போலியான கருத்துக்களை வெளியிட்டு முஸ்லிம் இனத்தின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் அவர் மீது தங்களுக்கு பரிதாபம் மாத்திரமே காணப்படுகின்றதென திலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவரின் கருத்து தொடர்பில் எந்த ஒரு இடத்திலும் பகிரங்க விவாதத்திற்கு பொது ஜன பெரமுன ஆயத்தம் எனவும் இது தொடர்பில் குணவர்தனவுக்கு சவால் விடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்லாம் தீவரவாதிகள் குறித்து கருத்து வெளியிடுவதற்கு முதுகெலும்பு இல்லாமலும் பொதுபல சேனா அமைப்பை வேட்டையாட முயற்சிக்கும் இவ்வாறான அரசியலுக்கு முற்றிப்புள்ளி வைப்பதற்கு பொது ஜன பெரமுன ஆயத்தம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முடியும் என்றால் விடுதலை புலிகளை விட ஆயிரம் மடங்கு கொடூரமான, கொலைகார ஐ.எஸ் தீவிரவாதத்திகளிடம் இருந்து நாட்டையும், பௌத்த மதத்தையும் காப்பற்றுவதற்கு செயற்படுவதாக முதுகெலும்பு உள்ள கருத்துக்களை வெளியிடுமாறு குணவர்தனவுக்கு பொது ஜன பெரமுன மேலும் சவால் விடுத்துள்ளது.



 
Top