GuidePedia

கொழும்பு முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் 'கொழும்பின் தொலைநோக்கு' எனிம் தொனிப்பொருளுடனான விஷேட கூட்டமொன்று நாளை (திங்கட்கிழமை 27) கொழும்பில் இடம்பெறவுள்ளது. 
மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதாம அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மானின் தலைமையில்  கொழும்பு - 06, மெரென் கிரேண்டில் இடம்பெறும் இந்நிகழ்வில், முன்னாள் கல்வி அமைச்சர் கருணாசேன கொடித்துவக்கு பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். 

இந்நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் இம்தியாஸ் பாகிர் மாக்கார், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.

கௌரவ அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் ரிஷ்வி முப்தி, அஷ்செய்க் அகார் முஹம்மத்,  அஷ்செய்க் யூசுப் முப்தி, தேசிய சூறா சபை தலைவர் தாரிக் மஹ்மூத், முஸ்லிம் கவுன்ஸில் உப தலைவர் ஹில்மி முஹம்மத் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், மேல் மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.பைரூஸ், அர்ஷாட் நிசாமுதீன், பாயிஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, முன்னாள் கொழும்பு மாநகர ஆணையாளர் உமர் காமில் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். 

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக பொதுத் தேர்தலில் போட்டியிடும் முஜிபுர் ரஹ்மானின் திட்டங்கள் தொடர்பில் 'கொழும்பின் தொலைநோக்கு' கருப்பொருளில் இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  



 
Top