GuidePedia

தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான விமல் வீரவன்ச, சமீபத்தில் மிரிஹான பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் தொடர்பில் வெளியிடுகின்ற கருத்தினால் இராணுவத்தினர் பல்வேறு வகையிலான சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்னாயக்க ஆகியோர் விமல் வீரவன்சவிடம் இவ்வாறான கருத்துக்களை அம்பலப்படுத்த வேண்டாம் என தனிப்பட்ட ரீதியில் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், விமல் வீரவன்ச அவர்களுக்கு செவி மடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தல் வேட்பாளர் இவ்வாறான கருத்து வெளியிடுவதனால் இராணுவத்தினரின் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டபோது விமல் வீர்வன்ச உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்ட புலனாய்வு பிரிவு தகவல்களை இவ்வாறு அம்பலப்படுத்துவது இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கும் செயலாகும் என இராணுவ பிரதானி குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் புலிகள் அமைப்பினால் பயன்படுத்தப்பட்ட 700 வாகனங்களை கிளிநொச்சி இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
அவ் அனைத்து வாகனங்களுக்கும் புலி அமைப்பினால் போலி இலக்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு இராணுவத்தினர் அதனை இதுவரையில் மாற்றாமல் பயன்படுத்தியுள்ளனர்.
உதாரணமாக மிரிஹான பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் WP JH 9244 என்ற இலக்கம் கொண்டுள்ளதோடு, அது 2004 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 14ஆம் திகதி டபல் கெப் வாகனம் ஒன்றிற்கு வாகன பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டதாகும் இலக்கம் அதுவாகும்.
எனினும் அன்று முதல் இவ் இலக்கத்தினை புலிகள் அமைப்பினால் வெள்ளை வான்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய இதுவரையில் இராணுவத்தினர் பொறுப்பில் உள்ள 700 வாகனங்களும் போலி இலக்க தகடுகளுடனே காணப்படுகின்றன.
இவற்றினை நன்கு அறிந்த விமல் வீரவன்ச அரசியல் இலாபத்திற்காக அம்பலப்படுத்துவது தேசத்துரோகமான செயல் என இராணு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்கமை கடந்த அரசாங்கத்தின் அமைச்சர் என்ற ரீதியில் இராணுவத்தினர் தொடர்பில் பல்வேறு தகவல்கள் விமல் வீரவன்சவிடம் காணப்படுவதோடு அவற்றினை எதிர்வரும் நாட்களில் அரசியல் இலாபத்திற்காக அம்பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவருக்கு இத்தகவல்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகவும் விரக்தியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



 
Top