நைஜீரியாவில் பரபரப்பாக இயங்கக்கூடிய மார்க்கெட்டில் இன்று நடந்த பயங்கர மனித வெடிகுண்டு தாக்குதலில் நடத்தப்பட்டது. இதில் 14 பேர் பலியானார்கள்.
வடகிழக்கு நைஜீரியாவில் உள்ளது டமாடுரு நகரம். இங்குள்ள மார்க்கெட்டில் இன்று ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். அப்போது மார்கெட்டுக்கு சாதாரணமான பெண் போல் வந்த ஒருவர் தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 14 பேர் உடல் சிதறி பலியானார்கள்.
இந்த சம்பவம் குறித்து மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறுகையில் ‘‘பெண் வெடிகுண்டு உடல் உள்பட 15 பேர் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மனித வெடிகுண்டாக செயல்பட்டது ஒரு மனநிலை பாதித்த பெண் என்பது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் கடந்த சில வருடங்களாக இந்த பகுதியில் மனநிலை பாதித்தபடி சுற்றிக்கொண்டிருந்தார்’’ என்றார். இதனால் தீவிரவாதிகள் மனநிலை பாதித்த பெண்ணை மனித வெடிகுண்டாக பயன்படுத்தியிருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால், கானா ஆஸ்பத்திரி ஊழயர் கூறுகையில் ‘‘15 உடல்கள் ஆஸ்பத்திருக்கு வந்துள்ளது. 47 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 8 பேர் பெண்கள் ஆவார்கள். அதில் ஒருவர் பெண் வெடிகுண்டாக செயல்பட்டவர்’’ என்று தெரிவித்தார்.
இதே நகரத்தில் கடந்த 18-ந்தேதி மூன்று மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் குறைந்தது 13 பேர் உயிரழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.