GuidePedia

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு கொழும்பு ஹென்ரி பேதிரிஸ் விளையாட்டரங்களில் நடைபெற்றது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

இடைநிறுத்தப்பட்டுள்ள 58000 அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பித்தல், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தல் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 50,000 ரூபா கொடுப்பனவு வழங்குதல் என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக 10,000 ரூபா கொடுப்பனவு மற்றும் மஹாபொல புலமைப்பரிசில் உதவித்தொகையை 6000 ரூபா வரை அதிகரிக்கும் திட்டமும் இந்த விஞ்ஞாபனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரச ஊழியர்களின் குறைந்த சம்பள தொகை 25000 ரூபா வரை அதிகரிக்கவும் தனியார் துறை ஊழியர்களுக்கு 3000 ரூபா கொடுப்பனவை வழங்குதலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவிடம் சமர்பிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.



 
Top