GuidePedia

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் பதவி நீக்கப்பட வேண்டுமென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து பேரை மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப் போவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் சுதந்திரக் கட்சி மற்றும் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்களே நீக்கப்பட வேண்டும்.
வேட்பு மனு வழங்கப்பட்டுள்ள விதத்தை அவதானிக்க வேண்டும்.
வேட்பு மனு வழங்ழகப்பட்ட நபர்கள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது.
வேட்பு மனுவில் கூட்டமைப்பின் தலைவரும் கையொப்பமிட்டுள்ளார். எவ்வாறு கொள்கையொன்றின் அடிப்படையில் இந்த வேட்பு மனுவில் கையொப்பமிட முடியும்.
பணம் சம்பாதித்தல், பணத்தை சுரட்டுதல் மற்றும் நாட்டை அழிவடையச் செய்தல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் இவ்வாறு வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளது.
நாடு அழிவடைவதனை தடுக்கவே மக்கள் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி எம்முடன் இணைந்து கொண்டார்கள்.
நாட்டை அழிக்க முயற்சிப்போருக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அர்ஜூன ரணதுங்க சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.



 
Top