2015 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 80 ஒருநாள் சதங்கள் பெறப்பட்டுள்ளன.
அதிகூடிய சதங்கள் பெறப்பட்ட வருடமாக இதுவரை 2014 ஆம் ஆண்டே காணப்பட்டது. அந்த ஆண்டில் 79 சதங்கள் பெறப்பட்டன.
எனினும் இன்றைய தினம் குசல் ஜனித் பெரேரா பெற்ற சதத்துடன் 2015 ஆம் ஆண்டில் 80 சதங்கள் பெறப்பட்டுள்ளன.
இதன் மூலம் அதிகூடிய சதங்கள் பெறப்பட்ட வருடமாக 2015 வரலாற்றில் பதிவானது.