GuidePedia

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நாளை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலைமை குறித்து அவர் உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பது குறித்து கருத்து வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு பெற்றுக்கொண்ட, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட தரப்பினர் தொடர்பிலும் தகவல்களை வெளியிடயுள்ளார்.
சந்திரிக்கா கடந்த 9ம் திகதி வெளிநாட்டுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
வேட்பு மனு வழங்குவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அவர் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 25ம் திகதி நாடு திரும்பிய அவர் நாட்டின் அரசியல் சூழ்நிலைகளை அவதானித்து நாளை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்



 
Top