இலங்கை நாட்டில் சூடு பிடித்திருக்கும் பொதுத் தேர்தல் நல்ல ஒரு மாற்றத்தை தரும் என்று பொதுவாகஎதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபத்தேர்தலில் தோல்வியுற்ற மஹிந்த ராஜபச்ச அவர்கள் பிரதமர் கதிரையை குறிவைத்துஇப்பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
மறுபுறம் ஜக்கிய தேசிய கட்சியிலிருந்து தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தனது பதவியை தக்கவைத்துக்கொள்ள பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகிறார்.
நிற்க, ஜனாதிபதி மைத்திரி சிரிசேன அவர்கள் புதிய அரசாங்கத்திற்கான பிரதமரை நியமிப்பதில் வேறு ஒருதிட்டத்தை வைத்திருப்பது அவரது அண்மைக்கால பேச்சுக்களிலிருந்து தெரிய வருகிறது.
இனவாத, குடும்ப ஆட்சியிலிருந்து இந்த நாட்டை மீட்டி ஜனாதிபதி மைத்திரி சிரிசேனா அவர்களிடத்தில்கொடுத்திருப்பது போல இந்த பிரதமர் பதவியையும் ஒரு நல்ல, நேரமையான, ஆற்றலுள்ள நபரிடத்தில்ஒப்படைப்பது என்பது பற்றி நாம் நமது கருத்தையும் ஆலோசனைகளையும் கண்டிப்பாக தெரியப்படுத்தவேண்டும்.
இன்றைய இந்த அரசியல் சந்தையில் அதிக விலைமதிக்கதக்க, அனைவராலும் மதிக்கதக்க ஒரு நபர்தான் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் கெளரவ அனுர குமார திசாநாயக்க.
புதிதாக அமைய இருக்கும் இந்த அரசாங்கத்திற்கு பிரதமராக தலைமைதாங்கி வழிநடத்த தகுதியானவராகசகோதரர். அனுர குமார திசாநயக்க அவர்களை நான் காண்கிறேன்.
மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்