கல்முனையில் நாம் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஹரீசை ஆதரிப்பதற்காக அவரிடமிருந்து ஒரு சதமாவது பெற்றதாக யாரும் நிரூபித்தால் உலமா கட்சியை கலைப்போம் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சவால் விடுத்தார்.
கட்சி ஆதரவாளர்களை தெளிவு படுத்துமுகமாக நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது...
இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் உலமா கட்சி ஆரம்பமானது முதல் அதன் ஒவ்வொரு நகர்வும் பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை எம் மீதமான அதிக விமர்சனங்கள் மூலம் தெரியலாம். எல்லோரும் ஓடும் பக்கம் வயிற்றுமாடும் வாலை கிளப்பிக்கொண்டு ஓடுமாப்போல் ஓடும் கட்சியல்ல உலமா கட்சி. உண்மை எந்தப்பக்கம் உள்ளதோ அந்தப்பக்கம்ää எவர் எதிர்த்தாலும் அப்பக்கம் நி;ற்கும் மிகப்பெரிய துணிச்சலை இறைவன் எமக்கு கொடுத்துள்ளான். பணம் வாங்கி அரசியல் செய்வதையே பிழைப்பாக கொண்டோர் எம்மையும் அவர்கள் போன்று சிந்திக்கின்றனர். ஆனால் சீரானää நேர்மையான அரசியல் கொள்கை கொண்டு நாம் செயற்படுகிறோம். எமது முழு இலக்கும் முஸ்லிம் சமூகத்துக்கு தேவையானää யதார்த்தமான அரசியலை புரிய வைப்பதுதான். இதன் காரணமாகவே கல்முனை முஸ்லிம் சமூகம் 2005ம் ஆண்டு தேர்தலில் ஒரு பக்கம் நின்ற போது பயங்கரவாதத்திலிருந்து சமூகம் விடுதலை பெற வேண்டும் என்ற காரணத்துக்காய் நாம் மறு பக்கம் நின்றோம். அதில் வெற்றியும் கண்டோம். அதே போல் தான் அனைத்து; தேர்தல்களிலும் நாம் யாருக்கும் விலை போகாத சக்தியாக செயற்பட்டோம்.
உலமா கட்சி நிற்கும் பக்கம் தோற்கும் என சிலர் தற்போது சொல்கிறார்கள். இவர்கள் இறைவனை நம்பாத சாஸ்திரகாரர்கள். வெற்றி தோல்வி என்பது சகலருக்கும் சகஜம். நபியவர்கள் கூட சில யுத்தங்களில் தோல்வியுற்றுள்ளார்கள். எமது வரலாற்றில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டுமே நாம் நின்ற பக்கம் தோற்றது. அது கூட இன்பமான தோல்விதான். அது தவிர்ந்த அனைத்து தேர்தலிகளிலும் நாம் நின்ற பக்கம் வெற்றியை கண்டுள்ளோம். 2005 ஜனாதிபதி தேர்தல் 2008 கிழக்கு மாகாண சபை தேர்தல்ää 2010 ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் என பல தேர்தல்களை கூற முடியும். இத்தேர்களில் நாம் ஐக்கிய மக்கள் சுதந்;திர முன்னணியின் வெற்றிக்காக பாடு பட்டோம். இதன் போது நாம் அக்கட்சியிடம் ஒரு சதமேனும் பெற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் நடவடிக்கைகளுக்காக பணம் பெற்றுக்கொள்வதில் தப்பேதும் இல்லைத்தான். ஆனாலும் நாம் அது விடயத்தில் சுய கௌரவம் பார்த்ததோடு எமது சொந்த பணத்தை செலவு செய்தே நாடு பூராவும் பிரச்சாரம் செய்தோம்.
இம்முறை நாம் தேசிய ரீதியில் ஜனாதிபதி மைத்திரியின் கட்சிக்கும் பிராந்திய ரீதியில் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வேற்பாளர்களுக்கும் குறிப்பாக ஹரீசுக்கும் ஆதரவாக களமிறங்கியுள்ளமை பாரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் காங்கிரசை கடுமையாக எதிர்க்கும் நாம் ஹரீசை ஆதரிப்பது என்றால் பணத்துக்காக இருக்கும் என்று சிந்திக்கிறார்கள். பொய் கதைகளை பரப்புகிறார்கள். உண்மையில் தேசிய கட்சிகள் எதுவுமே கல்முனையில் அரசியல் அறிவுள்ள அரசியல் அனுபவமுள்ள எவரையும் இம்முறை இறக்கவில்லை. அ. இ. மக்கள் காங்கிரஸ் என்ற கட்சி ஊழல் மிக்க சுயநலவாத ஏமாற்றுக்கட்சியாகும் என்பதில் எமக்கு நிறைய அனுபவம் உண்டு. இவர்கள் தமது நலனுக்காக மற்றவர்களை ஏணியாக பாவித்து விட்டு அவர்களை உதைக்கும் நயவஞ்சக குணம் கொண்டவர்கள். அவர்களால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரும் சாய்ந்தமருதில் சில ஆயிரம் வாக்குகளை பெற முடியுமே தவிர மாவட்டத்தில் வெற்றியை பெற முடியாது.
இந்த நிலையில் கல்முனையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஹரீஸ் அவர்கள் மட்டுமே வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. அவருக்கு மாவட்டம் முழுவதும் வாக்குகள் உள்ன என்பதை கடந்த தேர்தல்களில் கண்டுள்ளோம். 2004ம் ஆண்டு அவர் முஸ்லிம் காங்கிரசை எதிர்த்து களமிறங்கிய போதும் ஆயிரம் வாக்குகளால் தோல்வியுற்றார். அந்த தெர்தலில் நான் தனிக்கட்சியில் போட்டியிட்டதால் என்னாலேயே ஹரீஸ் தோற்றதாகவும் எனக்கு கிடைத்த கல்முனை வாக்குகள் அவருக்கு கிடைத்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார் என பத்திரிகைள் எழுதின.
ஆகவேதான் கல்முனைத்தொகுதிக்கென இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை காக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக நாம் ஹரீசை ஆதரிக்கிறோம். அதனை இழக்கச் செய்வது கல்முனை சமூகத்துக்கு செய்யும் துரோகமாகும். பணத்துக்காக நாம் அவரை ஆதரிப்பதாயின் அமைச்சராகவும்ää கோடீஸ்வரராகவும் உள்ள அமைச்சர் ரிசாதின் மயில் கட்சியை நாம் ஆதரித்திருப்போம்.
நாங்கள் முஸ்லிம் சமூகத்தின் நன்மையை தூர நோக்கத்தில் சிந்திப்பதாலும் எதிர் வரும் பாராளுமன்றத்தில் தமிழ் கூட்டமைப்பும் உள்ள தேசிய அரசாங்கமே ஆட்சியிலிருக்கும் என்பதால் கல்முனைக்கு உறுப்பினர் இல்லாது போனால் கல்முனை நகரம் கூட நம்மிடமிருந்து பறி போகலாம். அத்துடன் கல்முனைத்தொகுதியில் உள்ள அனைத்து ஊர்களினதும் ஏழைகள் பாதிப்புறலாம். இன மோதல்கள் கூட ஏற்படலாம். இவ்வாறான பல வற்றை கருத்திற்கொண்டே எமக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் பாரிய அரசியல் வேறு பாடு இருந்தும் நாம் ஹரீசை ஆதரிக்கிறோம். நாமே ஆதரிக்கிறோம் என்றால் அவருக்கு கடந்த காலத்தில் வாக்களித்த மக்கள் மீண்டும் அவருக்கு வாக்களிப்பதில் என்ன நஷ்டம் ஏற்படப்போகிறது? ஆகவே கல்முனைத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைப்பதற்காக அனைவரும் ஒற்றுமைப்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரை வெல்ல வைப்போம்.