GuidePedia

போதைப்பொருள் கடத்தல் வலைய மைப்பின் முக்கியஸ் தரான மொஹம்மட் முபாரக் மொஹம்மட் முஜாஹிம் என்பவ ரைக் கைது செய்ய இன்டர் போலின் உதவியை இலங்கை நாடியுள்ளது. மலேசி யாவில் சுகபோகத்துடன் வாழும் இவர், இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘செல்வம்’ ‘பிராவர்தனய’ ஆகிய சிங்கள திரைப்படங்களின் தயாரிப்பாளராவார்.
‘செல்வம்’ ஆவணப் படம் வெளியீட்டு நிகழ்வில் அதன் தயாரிப்பாளர் மொஹமட் முஜாஹிம், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் நெருக்கமாகக் காணப்பட்டார். கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி செல்வம் ஆவணப்படம் கொழும்பு ரீகல் திரையரங்கில் திரையிடப்பட்டது.
மொஹமட் முஜாஹிமின் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தில் சன்ஜய லீலாரட்ன நடித்திருந்தார். தமிழ் மக்களின் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணப் படம் தயாரிக்கப்பட் டிருந்தது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர் ‘செல்வம்’ என்பதே இத்திரைப்படத்தின் பிரதான பாத்திரமாக அமைந்திருந்தது. இப்பட வெளியீட்டு விழாவில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.
இதிலிருந்து கடந்த ஆட்சியில் பாரிய குற்றவாளிகளுக்கெல்லாம் எப்படி சலுகைகளும் மதிப்பும் வழங்கப்பட்டிருந்து என்பது தெளிவாக புலப்படுகிறது.



 
Top