திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வாக்காளர்கள் இரண்டு ஆசனங்களை பெற்றுக் கொடுத்தால் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ஆசனத்தில் அமர்வதற்கு முன்னர் தனி கரையோர நிர்வாக மாவட்டத்தை பெற்றுக்கொடுப்பேன் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் கூறினார்.அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகின்றது.
கேள்வி: திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதுவரை பொதுத் தேர்தலில் போட்டியிட்டதில்லை. இந்த நிலையில் இப்பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை உங்களது கட்சி போட்டியிடுவதால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் நிலை ஏற்படாதா?
பதில்: -அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் அனைவரும் முஸ்லிம்கள். எனவே எங்களது கட்சிக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதாக அமையும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் போது அது முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை உறுதிப்படுத்துவதாக அமையாது. ஐக்கிய தேசிய முன்னணியில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றது.
அதனால் அவர்களுக்கு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியாது. எனவே அந்த பட்டியலில் மூன்று சிங்கள வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் இரு சிங்கள சகோதரர்கள் வெற்றி பெறக் கூடிய நிலையே காணப்படுகிறது.
முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தக் கூடிய ஒரே கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸாகவே இருக்கும். இதை வாக்காளர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
முதன் முதலில் நாங்கள் தனித்து போட்டியிடுகின்றோம். எங்களுக்கு எங்கள் வெற்றி குறித்து நம்பிக்கை இருக்கின்றது.
முதன் முதலில் நாங்கள் தனித்து போட்டியிடுகின்றோம். எங்களுக்கு எங்கள் வெற்றி குறித்து நம்பிக்கை இருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் உதயமான மாவட்டம் திகாமடுல்ல மாவட்டம். அந்த மாவட்டத்தில் நாங்கள் துணிச்சலுடன் தனித்துப் போட்டியிடுகின்றோம் என்றால் முஸ்லிம் காங்கிரஸ் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கம் மறக்கப்பட்டு விட்டது. ஒரு தனி நபர் தாம் விரும்பியவாறு இந்த கட்சியைக் கொண்டு செல்கின்றார்.
அவர் விரும்பிய முடிவுகளை எடுக்கின்றார். அவர் எடுத்த முடிவுகள் அத்தனையும் பிழைத்துப் போய்விட்டது. கடந்த தேர்தலில் ரணிலை ஆதரித்தார். மஹிந்த வெற்றி பெற்றார்.
அதற்கு முந்தைய தேர்தலில் பொன்சேகாவை ஆதரித்தார். மஹிந்த வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் மஹிந்தவுடன் நின்றார். நாங்கள் தான் முதன் முதலில் மைத்திரியை ஆதரிக்க முடிவு செய்தோம். அதன் பின்னர்தான் அவர் வெளியே வந்தார். அதுவும் தபால் வாக்குகள் முடிந்தவுடனேயே வெளியே வந்தார். இப்படிப்பட்ட ஒரு கட்சியும் ஒரு தலைமையும் இருப்பதால் எமது சமூகத்துக்கு எந்தவொரு பிரயோசனமும் இல்லை. இந்த மாதிரியான ஒரு கட்சி இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன?
ஒவ்வொரு தேர்தலிலும் இவர் கரையோர மாவட்டத்தை தாருங்கள் அல்லது இதைத் தாருங்கள். அதைத் தாருங்கள் எனக் கேட்கின்றார்.
தேர்தல் காலத்தில் மட்டும்தான் பேரம் பேசுவார். தேர்தலின் பின்னர் ஐந்து வருட காலத்துக்கு அல்லது நான்கு வருட காலத்துக்கு அமைச்சராக இருக்கின்றார். அப்போது அனைத்தையும் மறந்து விடுகின்றார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கரையோர மாவட்டம் பெரிய பிரச்சினையாக இருந்தது. மக்கள் மத்தியில் இப்பிரச்சினை ஒரு நாட்டைக் கேட்பது போல் பேசப்பட்டது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கரையோர மாவட்டம் பெரிய பிரச்சினையாக இருந்தது. மக்கள் மத்தியில் இப்பிரச்சினை ஒரு நாட்டைக் கேட்பது போல் பேசப்பட்டது.
கரையோர மாவட்டம் ஒரு சிறிய விடயம்.
தமிழ் மொழி மூலமான ஒரு தனியான நிர்வாக மாவட்டமே அது. யாழ்ப்பாணமும் கிளிநொச்சியும் ஒரே மாவட்டமாக இருந்து இன்று அது இரண்டு மாவட்டமாக மாறியுள்ளது. வன்னி ஒரு தேர்தல் மாவட்டம். அது மூன்று மாவட்டங்களாக மாறியுள்ளது. திகாமடுல்ல மாவட்டம் ஒரு தேர்தல் மாவட்டமாக இருந்தால் அதை இரண்டாகப் பிரிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல.
தமிழ் மொழி மூலமான ஒரு தனியான நிர்வாக மாவட்டமே அது. யாழ்ப்பாணமும் கிளிநொச்சியும் ஒரே மாவட்டமாக இருந்து இன்று அது இரண்டு மாவட்டமாக மாறியுள்ளது. வன்னி ஒரு தேர்தல் மாவட்டம். அது மூன்று மாவட்டங்களாக மாறியுள்ளது. திகாமடுல்ல மாவட்டம் ஒரு தேர்தல் மாவட்டமாக இருந்தால் அதை இரண்டாகப் பிரிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல.
இந்தப் பிரச்சினையை அவர் தேர்தல் நேரத்தின் போது தூக்கிப் பிடித்து அதை பூதாகரமாக காட்டுவார். தேர்தல் முடிந்த பின்னர் அதை மறந்து விடுவார். நாங்கள் அப்படியல்ல. சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம். செய்ய முடிந்தால் செய்வோம், ஆனால் செய்ய முடியாதது என்று ஒன்றுமில்லை.
திகாமடுல்ல மாவட்ட மக்களுக்கு வேண்டுகோளொன்றை விடுக்கின்றேன். திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் மக்கள் 60000 வாக்குகளை எமக்குத் தந்தால் இரண்டு ஆசனங்களை நாங்கள் பெறலாம். இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு பெற்றுத் தந்தால் எதிர்வரும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அமைச்சரவையை நியமிக்கும் முன்னர் நான் நிர்வாக மாவட்டத்தைப் பெற்றுக்கொடுப்பேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸுக்கு இரண்டு ஆசனங்களை கொடுத்துப் பார்த்தார்கள். மூன்று ஆசனங்களை கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால் ஒன்றுமே நடக்க வில்லை. இம்முறை நாங்கள் தனித்து போட்டியிடுகின்றோம். எமக்கு இரண்டு ஆசனங்களை முஸ்லிம் மக்கள் திகாமடுல்ல மாவட்டத்தில் பெற்றுத் தந்தால் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ஆசனத்தில் அமருவதற்கு முன்னர் திகாமடுல்ல மாவட்டத்துக்கு தனித்துவமான கரையோர மாவட்டத்தை பெற்றுக் கொடுத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். அப்படி தரவில்லை என்றால் அந்த அரசில் நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்க மாட்டேன். திகாமடுல்ல மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை மக்கள் பெற்றுத் தர வேண்டும். ஒரு ஆசனம் போதாது.
கேள்வி : அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?
கேள்வி : அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?
பதில்: – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பது சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அவர்களது அடிப்படை வசதிகள் போன்ற விடயங்களில் அவர்களுக்கு உறுதியுடன் பணியாற்றுவதற்கு உருவாக்கப்பட்டதாகும்.
குறிப்பாக இந்த நாட்டு முஸ்லிம்களுக்காக பெருந்தலைவர் ஆரம்பித்த அந்த கட்சி அவரது நோக்கங்கள் கொள்கைகள் அத்தனையும் மறந்து ஒரு தனிப்பட்ட தலைவரின் தேவைகளுக்காக அபிலாஷைகளுக்காக இன்று நடத்தப்பட்டு வருகின்றது. அவரது தனிப்பட்ட தேவைகளை மையமாக வைத்து செயற்படுவதால் இந்த நாட்டு முஸ்லிம் மக்கள் நாங்கள் கடந்த காலங்களில் வாக்குகளை பயன்படுத்தி ஒரு கட்சியினூடாக எதிர்பார்த்த விடயங்களில் நம்பிக்கை இழந்து இன்று இந்த வாக்குகள் சிதறி சின்னா பின்னமாவதை நாங்கள் பார்க்கின்றோம்.
எனவேதான் நாங்கள் இந்த நாட்டு முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்துகிறோம் சிறுபான்மை சமூகங்களுடைய எல்லா உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்காவே ஒரு பேரம் பேசும் சக்தியாக இக் கட்சியைக் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இதற்காக மக்கள் காங்கிரஸ் போட்டியிடும் மாவட்டங்களில் எம்மை ஆதரிக்கும்படி மக்களைக் கேட்டு கொள்கின்றோம்.
கேள்வி : வன்னி மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது குறித்து தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில் : அப்படியான குற்றச்சாட்டுக்களை முன் வைப்போரை விட நான் தமிழ் மக்களுக்கு அதிக சேவைகளைச் செய்துள்ளேன்.
பதில் : அப்படியான குற்றச்சாட்டுக்களை முன் வைப்போரை விட நான் தமிழ் மக்களுக்கு அதிக சேவைகளைச் செய்துள்ளேன்.
இதையிட்டு மிகவும் சந்தோஷமடைகின்றேன். மிதிவெடி அகற்றியது முதல் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை மடு பிரதேசங்கள் அதே போல் முசலி போன்ற யுத்த பிரதேசங்களில் மிதி வெடிகளை அகற்றி மெனிக் பாமில் தங்கியிருந்த மக்களை மீளக்குடியேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு கல் வீடுகளை கட்டிக் கொடுத்து பாடசாலைகளை நிர்மாணித்து அரச தொழில் வாய்ப்புக்களை வழங்கி விவசாயம் செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளேன்.
நான் செய்த நல்ல பணிகளை தமிழ் மக்கள் அறிவார்கள்.
நான் செய்த நல்ல பணிகளை தமிழ் மக்கள் அறிவார்கள்.
எந்தவொரு அரசியல் எதிர்பார்ப்புமில்லாமல் மனிதாபிமானத்துடன் அந்தப் பணிகளை மன்னார் வவுனியா முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்து கொண்டு கடந்த காலங்களில் மேற்கொண்டுள்ளேன். என் மீது குற்றம் சாட்டும் கட்சிகள் இது போன்ற எந்தவொரு பணியையும் செய்ததில்லை. மாகாண சபை அதிகாரங்களை வைத்துக் கொண்டும் நான் செய்ததில் பத்து சத வீதத்தைக்கூட செய்ததில்லை. அநியாயமாக என்னை முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமே பணி செய்வதாகவும் தமிழ் மக்களுக்கு பணி புரியவில்லை என்பது என் மீது கொண்ட தாழ்ப்புணர்ச்சி காரணமான முன் வைக்கப்படும் விமர்சனமாகும்.
யுத்தத்தில் தமிழர்களும் பாதிக்கப்பட்டார்கள் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள். முஸ்லிம்கள் 30 வருடங்களுக்கு முன்னர் துரத்தியடிக்கப்பட்டார்கள். தமிழர்கள் 3-4 வருடங்களுக்கு முன்னர் துரத்தப்பட்டார்கள். முதலில் தமிழர்களை மீள் குடியமர்த்தி அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுத்து விட்டு இரண்டாவதாக முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருந்தோம்.
எல்லோரும் வாழ வேண்டும். ஒரு இனம் மட்டும் வாழ வேண்டும் மற்ற இனம் வாழக்கூடாது என்று நினைப்பது நியாயமல்ல. எனவே அந்த மாவட்டத்துக்கு சொந்தக்காரர்களாக வாழ்ந்தவர்கள் யுத்த காலத்தில் வெளியேறியவர்கள் அல்லது பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்கள்.
வாழ விரும்பி மீள் வரத்தயாராகும் போது அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு எதைச் செய்தோமோ முஸ்லிம் மக்களுக்கும் அதையே செய்ய முற்பட்டோம். முஸ்லிம் மக்களை இன்னும் முறையாக மீள்குடியமர்த்த முடியவில்லை. பாதுகாப்பு வலயத்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர்.
நன்றி வீரகேசரி வாரவெளியீ (26-07-2015)
பேட்டி கண்டவர் எஸ்.கணேசன்
நன்றி வீரகேசரி வாரவெளியீ (26-07-2015)
பேட்டி கண்டவர் எஸ்.கணேசன்