(க.கிஷாந்தன்)
ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்களுக்கு எந்த அபிவிருத்தி திட்டங்களும் இல்லை என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும் நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
29.07.2015 அன்று அட்டன் காசல்ரீ பகுதியில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்…
ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மலையக மக்களுக்கு பல அபிவிருத்தி திட்டங்களை செய்து தருவதாக கூறியதோடு தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தையும் பெற்று தருவதாக கூறினார்.
தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற மைத்திரிபால சிரிசேன அவர்களை வெற்றிபெற செய்தது நாங்கள். ஆனால் இன்று அவருடைய புகைப்படத்திற்கு பக்கத்தில் ஏனைய மலையக அரசியல்வாதிகள் தங்களுடைய படங்களையும் பிரசுரித்து கொண்டு இருக்கின்றார்கள். இது மக்களுடைய வாக்குகளை பெருவதற்கான ஒரு சூழ்ச்சி ஆகும்.
இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதில் மும்மரமாக செயல்பட கூடியவர். அந்தவகையில் தோட்ட தொழிலாளர்களுடைய நியாயமான சம்பளம் தொடர்பாக தேர்தலுக்கு பின்னர் நல்ல தீர்வு பெற்று தருவதாக இனக்கம் தெரிவித்துள்ளார். அந்தவகையில் நிச்சியமாக இப்பிரச்சினையை இவர் மூலம் தீர்க்க முடியும் என்பதே தெளிவாக கூற முடியும்.
முன்னால் ஜனாதிபதி அவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இனவாதத்தை ஏற்படுத்தியதன் காரணமாக தோழ்வியடைந்தார்.
அத்தோடு தேர்தலின் பின்னரும் தான் தோழ்வியடைந்ததுக்கு தமிழ் மக்களே காரணம் என வெளிப்படையாக கூறியது அணைவருக்கும் ஞாபகம் இருக்கும்.
இவ்வாறு முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வருவதாக இருந்தால் நாட்டில் மீண்டும் இன துவேசம் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படும்.
நடைபெறவுள்ள தேர்தலில் மலையக மக்கள் மட்டும் இல்லாமல் நாட்டில் அணைவரும் ஜக்கிய தேசிய கட்சி மேல் முழு நம்பிக்கையை கொண்டுள்ளதோடு வாக்குகளை அளிப்பதற்கு தயாராகவுள்ளனர்.
நடைபெறவுள்ள பொது தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சி 117 ஆசனங்களை பெற்று ஆட்சி அமைப்பதோடு நல்லாட்சிக்கு வழிவகுக்கும். நிச்சியமாக ஜக்கிய தேசிய கட்சி வெற்றிபெறும்.
மேலும் கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் போது பெருந்தோட்ட மக்களுக்கு கனிசமான அபவிருத்திகள் எதுவும் நடைபெறவில்லை.
தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனி வீடு கட்டும் திட்டதினை ஏற்படுத்தினார்கள். இதேவேளை எதிர்காலத்திலும் லயன் வீடுகளை உடைத்தெரிந்து மலையக மக்கள் சகல வசதிகளும் கொண்ட தனி வீட்டில் வாழ்வதற்கு ஜக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே உருவாக்க முடியும் என அவர் இதன்போது தெரிவித்தார்.