(அஸ்ரப் ஏ சமத்)
வெள்ளவத்தை மெரைன் ரைவ் கோட்டலில் கொழும்பு இளைஞா் கூட்டமைப்பு என்ற அமைப்பு முஜிபு ரஹ்மானுக்கான ஆதரவும், கொழும்பு வாழ் முஸ்லீம்களது கல்வி, வீடமைப்பு, தொழில் வாழ்வாதார பற்றிய கலந்துரையாடல் சட்டத்தரனி யு.எம். மா்சூக் தலைமையில் நடைபெற்றது. இதில் கொழும்பு வாழ் புத்திஜீவிகள் வா்த்தகா்கள், இளைஜா்களும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனா்.
இங்கு முஜீபுர் ரஹ்மான் - உரையாற்றுகையில் :-
கொழும்பில் க.பொ. த சாதார இம்முறை சித்தியடைந்தவாக்ள 5 விதமே. மேல் மாகாணத்தில் 39 கல்வி வலயங்களுள் கொழும்பு மத்திய கல்விய வலயம் 36 வது பின்தங்கிய நிலையில் கடந்த ஆண்டுடின் க.பொ. சாதரண தரததின் சித்தியில் உள்ளது.
வருடா வருடம் 1000 மேறபட்ட மாணவா்களுக்கு வருடா வருடம் பாடசாலை முதலாம் தர அனுமதி கிடைப்பதில்லை. சர்வதேச பாடசாலை நோக்கிச் செல்கின்றனா். தெமட்டக் கொடையில் வீதியில் மட்டும் 20 சர்வதேச பாடசாலைகள் உள்ளது. இதனை வியாபாரமாக்க கொண்டு நடத்துகின்றனா்.
கொலநாவையில் 15 சர்வதேச பாடசாலைகள் இருக்கின்றது. மாதாந்தம் 15ஆயிரம் அறவிடுகின்றனா். பின்னா் பனம் கட்ட தாய்மாா் முடியாமல் அரச பாடசாலை களில் அனுமதி கேட்டு அரசியல் வாதிகளிடம் செல்கின்றனா். பெற்றோா்கள் தமிழ்மொழி முலம் பேசுவது பழகுவது ஆனால் சிங்கள மொழி முலம் தமது பிள்ளைகளை சோக்கின்றனா். இதனால் பிள்ளைக்கு ஒரு மொழியும் தெரியாது. இதனால் 5.6.10ஆம் ஆண்டுடன் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் நிறுத்தி விடுகின்றனா்
இப்பவும் நீங்கள் மருதானைக்கு சென்றால் அங்கு ஒரு இடத்தில் சாரய (மது) வாா் ஒன்று இருக்கின்றது. அந்தக் கட்டிடத்திற்கு மேல் முஸ்லீம் பிள்ளைகள் செல்லக் கூடிய சர்வதேச பாடசாலை ஒன்றும் இயங்குகின்றது. இது தான் கொழும்பு வாழ் மக்களின் நிலை. கடந்த ஜனாதிபதிகள் சந்திரிக்கா தொட்டு மஹிந்த வரை இந்த மக்களுக்கு எவ்வித அபிவிருத்தியையும் செய்யவில்லை. மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் யுகத்திற்குப் பிறகு இந்த மக்களை கோட்டாபாய கொழும்பை அழகுபடுத்தல் என்ற காரண்த்தைக் காட்டி மக்களது பொருளாதாரம் வாழ்வாதாரம் வீடமைப்புக்களை அப்புறப்படுத்தினாா்.