GuidePedia

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையுடன் தொடர்பிலான பிரேதப் பரிசோதனையின் இறுதி அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
நீதவான் நிசாந்த பீரிஸ் இன்று சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்ட வைத்திய அதிகாரிகளின் சாட்சியங்களை திரட்டுவதற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளை, புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக்கொள்ள முடியும் என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
வசீம் தாஜூடீனின் மரணம் விபத்து அல்ல கொலை என்று குற்றப்புலனாய்வுத்துறையினர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவானிடம் தெரிவித்துள்ளனர்.
2012ஆம் ஆண்டு மே மாதம 16ஆம் திகதி நாரஹென்பிட்டிய ஷாலிக்கா மைதானத்திற்கு அருகில் அவர் பயணித்த வாகனம் தீப்பற்றியதினால் உயிரிழந்துள்ளார் என செய்தி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.



 
Top