GuidePedia

(க.கிஷாந்தன்)

ஜனவரி எட்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட புரட்சியை முன்கொண்டு செல்ல வேண்டுமாயின் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் 26.07.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அமைதியான தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது என நாங்கள் நினைக்கவில்லை இவ்வாறான தொரு தேர்தலை நடத்த முடியும் என்று  பொலிஸார் இன்று தேர்தல் ஆனையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றனர்.
எங்களுடைய சுவரொட்டிகளை கூட அகற்றுகின்றனர். ஆகவே இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தலை போன்றே இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. இது சாத்தியமானது நல்லாட்சி மூலமாகவே என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவால் இவ்வாறானதொரு தேர்தலை நடத்த முடியாது.தேர்தல் சட்ட மீறல்களை முன்னெடுக்காவிடின் அவர்கள் நீரில்லாத மீன்களை போல் ஆகிவிடுவார்கள். நாங்கள் இந்த இடத்திற்கு வந்திருப்பது ஜனவரி எட்டாம் திகதி ஆரம்பித்த புரட்சியை முன்னோக்கி கொண்டு செல்லவே ஆகவே இந்த புரட்சியை தொடர்வதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களியுங்கள்.



 
Top