GuidePedia

மக்கள் விடுதலை முன்னணி இன்று 10 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இன்று காலை 10.00 மணிக்கு புறக்கோட்டையிலும், மாலை 4.00 மணிக்கு பிலியந்தளையிலும், மாலை 5.00 மணிக்கு மொரட்டுவயிலும் இடம்பெறும் பிரச்சாரக் கூட்டங்கள்  கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
ஹம்பாந்தோட்டை, அம்பலாங்கொட, ரத்ன வாடிகல ஆகிய இடங்களில் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலும், மாத்தறை, இலுக்வெல்ல, விலேகொட, பொல்ஹேன ஆகிய இடங்களில் கட்சியின் உயர் மட்ட உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி தலைமையிலும் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது,



 
Top