GuidePedia

ஆடுமயிலே! ஈழ அரங்கம் முழுவதிலும்
2015 ஆகஸ்ட் 17 பாராளுமன்ற தேர்தல் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஒரு விசித்திரமான தேர்தலாக அமையப்போகின்றது.
இதுகாலவரை நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் முஸ்லிம்கள் ஏதேதோ காரணங்களுக்காக ஏதேதோ கட்சிகளுக்கு ஆதரவாக இருந்து தமது வாக்குகளை அளித்து வந்திருக்கிறார்கள்.
பெரும்பான்மைக் கட்சி, சிறுபான்மைக் கட்சி, பிற சமூகக் கட்சி, சொந்த சமூகக் கட்சி என்றெல்லாம் பெரிதாகப்பேதம் பார்க்காமல் எல்லாக் கட்சிகளுக்கும் தம்முள் பிணக்கேதுமின்றிப் பிரிந்து வாக்களித்து வந்திருக்கின்றனர்.
ஆரம்ப காலத்திலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதனாலும் ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கியவர்களுடன் அன்றைய முஸ்லிம் தலைவர்கள் அந்நியோந்நியமாக இருந்தாலும் முஸ்லிம்கள் ஐ.தே.கவின் ஆதரவாளர்களாகவே இருந்தனர்.
அதற்கு பின்னர் உருவான கம்மியனிஸக் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி போன்றவை கம்மியனிஸ, சோஷலிஸ சித்தாத்;தங்களை முன்வைத்ததனால் அவை இறை மறுப்புக்கட்சிகள் என அர்த்தப்பட்டதில் முஸ்லிம்கள் அவற்றின் பின்னால் செல்ல வில்லை. அதனால் ஐ.தே.கட்சியுடனேயே தொடர்ந்தும் இருந்தனர்.
ஐம்பதுகளில் ஐ.தே.கவை விட்டும் எஸ்.டபிள்ய10.ஆர்.டீ.பண்டாரநாயக்கா பிரிந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தபோது அவருடன் இருந்த டாக்டர்.பதியுத்தீன் போன்றோரின் பிரசாரம் காரணமாக ஐ.தே.கட்சிக்கென்றே இருந்த முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் நாடுப10ராகவும் சுதந்திரக் கட்சிக்கும் ஆதரவளிக்கத் தொடங்கினர். நாடளவில் தனிப்பச்சையாக இருந்த முஸ்லிம் பிரதேசங்களில் நீலக்கொடியும் பறக்கத் தொடங்கின. சுதந்திரக் கட்சியிலும் முஸ்லிம் எம்பிக்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
எண்பதுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலையெடுக்க தொடங்கியபின் வட-கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சக்தியாக வளர்ந்தது.
ஒரு தசாப்தம் காப்பதற்கு முன் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துவத்தைப் பேரம்பேசி பெரும்பான்மைக் கட்சி ஒன்றுக்கு சாமரம் வீசத் தொடங்கியது. முஸ்லிம் சமூக விடுதலை அமைச்சுப் பதவிக்குப் பேரம் பேசப்பட்டது.
2000 இல் மு.காவை பதவி பாரம் எடுத்த இன்றைய தலைமைத்துவம் பழைய தலைமைத்துவத்தின் அதே பல்லவியை பாடிக்கொண்டு ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் இடையில் மென்பந்தாக அடிபடத்தொடங்கிற்று.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் முஸ்லிம்களின் ப10ரண விடுதலை நோக்கியும்ää நிறைவான சமத்துவம்ää சம அந்தஸ்துää சில சந்தர்ப்பங்களைக் குறிவைத்தும் நகராமல் முதலாம் கட்டää இரண்டாந்தர தலைவர்களின் பாராளுமன்றää மாகாண சபைää உள்ள10ராட்சி மன்ற பதவிகளை கட்சியின் இலட்சியமாக்கி அடியெடுத்து வைக்கத்தொடங்கியது. மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியுமென்ற மு.கா தலைமைத்துவத்தின் தப்புக்கணக்கு சந்திக்கு படிப்படையாக வரத்தொடங்கியது.
முஸ்லிம்கள் மனதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் அகலத் தொடங்கிற்று. முஸ்லிம் காங்கிரஸை விட்டால் வேறுவழி கிடைக்காது என்று கலவரப்பட்டுக் கொண்டிருந்த றிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மனதை குளிரவைக்கும் ஒரு மாற்று மருந்தாகத் தெரிந்தது.
முஸ்லிம்களின் பரம எதிரியாக மாறிய மஹிந்தவை சென்ற ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்க தேரர்களும்ää தோழர்களும் பொது எதிரணி அமைத்து போட்டியிட்டனர். மைத்திரியின் வெற்றியை உறுதிப்படுத்த மொத்த முஸ்லிம்களின் வாக்குகளையும் திரட்டும்பணி மிச்சமாயிருந்தது மைத்திரிக்கு வாக்களிக்க தயாராயிருந்தனர்.
10 இலட்;சம் வாக்குகளுக்கும் அதிகமான முஸ்லிம் வாக்குகள் இருந்தன. அவற்றில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் மைத்திரிக்கு வாக்களிக்க தயாராயிருந்தனர்.
மிகுதியான மூன்றில் ஒருபகுதி முஸ்லிம் வாக்குகள்ää சுமார் மூன்றரை இலட்சம் முஸ்லிம் வாக்குகள் மஹிந்தவின் பயங்கரம் காரணமாக அளிக்கப்படாமல் விடப்படும் சாத்தியம் இருந்தது. இவ்;வாறு நடைபெறுமானால் மஹிந்த வெல்வது உறுதியாகிவிடும். அப்படி மஹிந்த வென்றாலும் பொதுபல சேன போன்ற புறம்போக்குகளின் அடாவடித் தனங்களுக்கும்ää அட்டூழியங்களுக்கும் முஸ்லிம்கள் அனைவரும் மீண்டும் மீண்டும் ஆளாக நேரிடும்.
இப்படி நடவாமல் தடுத்து முஸ்லிம்களைக் காப்பாற்றுவதற்குரிய ஒரேவழி அந்த முஸ்லிம்களும் மைத்திரிக்கு வாக்களிக்கும்படி செய்வதுதான். அதற்குரிய ஒரே வழி மஹிந்தவின் பயங்கரத்தின்மீது அவர்களுக்குள்ள பயத்தை துடைத்தெறிவதுதான்.
இதுபற்றி முஸ்லிம் காங்கிரஸ் எதுவித அக்கறையும் இல்லாது இருந்தது. அதுபோதாதென்று மைத்திரிக்கு வாக்குப் போடுவதற்குத் தயாராக இருந்த முஸ்லிம்களின் மனதையும் மாற்றிவிடுவதற்காக “ முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அல்லாஹ்வுக்கு அடுத்தபடி மஹிந்ததான் இருக்கின்றார்” என்று இஸ்லாமிய மதகோட்பாடுகளை லட்சியம் செய்யாது முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை வெளியாக்கிற்று.
தமது மந்திரிää பிரதி மந்திரி பதவிகளைக் காப்பாற்ற அல்லாஹ்வுக்கு அடுத்த இடத்தில் மஹிந்தவை தூக்கி வைத்துப் பேசுவதற்கும் முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவே இருந்தது.
முஸ்லிம் கட்சிகளில் மக்கள் காங்கிரஸைவிட பெரிய கட்சியாக கூடிய சக்தியுள்ள கட்சியாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவுக்கு வாக்களிக்கவே தயாராக இருந்தது. முஸ்லிம்கள் அடிபட்டாலும்ää உதைபட்டாலும்ää குற்றுயிராக்கப்பட்டாலும்ää கொலை செய்யப்பட்டாலும்ää முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டாலும்ää வியாபாரத்தலங்களும்ää பள்ளிவாசல்களும் தீக்கீiரையாக்கப்பட்டாலும் முஸ்லிம் காங்கிரஸ_க்கு ஒரு பொருட்டேயல்ல. அமைச்சர் பதவிää படைகளின் பாதுகாப்போடு பவனி வருதல்ää சுகபோகமான வாழ்க்கை இவைதான் முஸ்லிம் காங்கிரஸின் லட்சியமாய் இருந்தது.
மஹிந்தவின் ஆட்சியில் நீடித்திருப்பது மக்கள் காங்கிரஸ_க்கு நெருப்பின்மீது இருப்பதுபோலவே இருந்தது. முஸ்லிம்களை அகதிகளாக அலையவிட்டு தாம் மட்டும் சொகுசாக வாழ்வதா?
இதுவே மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட பதியுதீனின் சிந்தனையாகவும் இருந்தது.
90 இல் தானும் அகதியாகி விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்ட தழும்புகள் நெஞ்சில் நிறைந்து இருந்தன. அந்தக் காயங்கள் ஆறினாலும் சோகங்கள் மாறவில்லை.
“இன்னொருமுறை முஸ்லிம்களை இனவாத சக்திகளுக்குப் பலியாக விடக்கூடாது” என்று முடிவெடுத்து முஸ்லிம் காங்கிரஸின் முஸ்லிம் விரோத சிந்தனைகளை தன் காலணியின்கீழ் கசக்கிவிட்டு இரண்டு எம்பீக்கள் வைத்திருந்த மக்கள் காங்கிரஸின் றிஷாட் பதியுதீனும்ää ஓட்டமாவடி அமீர் அலியும் மஹிந்தவின் சிறையை உடைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு சுதந்திர வானைத் திறந்துவிட வெளியேறினார்கள்.
அந்தச் செய்தி முஸ்லிம்கள் மத்தியில் காட்டுத்தீபோல் பரவி “நாரே தக்பீர்! அல்லாஹ_ அக்பர்” என்ற கோஷம் வானைப்பிளக்க ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் ஜிஹாத் போராளிகள் போல மனத்துணிவும்ää உடலுறுதியும்ää இறைநிறைவும் கொண்டு பிரார்த்தனையோடு மைத்திரிக்கு வாக்களித்தனர்.
மைத்திரி வென்றார். முஸ்லிம்கள் வென்றார்கள். ஐ.தே.க வென்றது. இந்த நாடு வென்றது. தமிழர்கள் வென்றார்கள். அவர்கள் தீர்மானம் வென்றது. தேரர்கள் வென்றார்கள். பௌத்தம் வென்றது. சிங்களவர்கள் வென்றார்;கள். தேசாபிமானம் வென்றது.
இதற்கெல்லாம் தீர்மானிக்கின்ற காரண கர்த்தாவாக இருந்து செயற்பட்ட அசகாய சூரன் அன்பர் றிஷாட் பதியுதீன்தான்.
இரண்டு எம்பீக்களை வைத்துக் கொண்டு இந்த நாடு படுகுழியில் விழுந்துவிடாமல் காப்பாற்ற மக்கள் காங்கிரஸால் முடிந்திருக்கின்றது.
இனி இந்த நாட்டை சொர்க்க ப10மியாக்கும் ஐ.தேகவின் கனவையும் மைத்திரியின் கனவையும் வெற்றிகமாச் செய்து முடிக்க இந்த இரண்டு எம்பீக்களோடு இன்னும் ஐந்தாறு எம்பீக்களை மக்கள் காங்கிரஸ் பெற்றுக் கொள்ள முஸ்லிம்கள் அனைவரும் மக்கள் காங்கிரஸ{க்கு வாக்களித்து முஸ்லிம்களின் எதிர்காலத்தை சுபீட்சமானதாக ஆக்க ஒத்துழைப்பார்களாக.
வாழ்க றிஷாட்! வளர்க மக்கள் காங்கிரஸ். அழகு ஜொலிக்க ஆடட்டும் மயில்!
-ஹஃபீலா தௌபீக்-



 
Top