(எம்.ஆர்.சியாஉர் ரஹ்மான்)
குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவனாக வடமேல் மாகாணத்தில் முதலமைச்சராக மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இன்று வரைக்கும் இந்த மாவட்டத்தில் வாழும் மக்களுக்காக இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் என்னால் முடியுமான சேவைகளை செய்துள்ளேன். குறிப்பாக இந்ந மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்க்கும் என்னுடைய ஒத்துழைப்புகளை வளங்கி வந்துள்ளேன.; என குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.
சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட மேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா மற்றும் குருநாகல் மாவட்ட மத்திய குழு உறுப்பினர்கள் காமினி ஜெயவிக்ரம பெரேரா அவர்களுக்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஆதரவு வளங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்திற்க்கும் எனக்கும் குருநாகல் மாவட்ட சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஆகிய நீங்கள் ஆதரவு வளங்க முன்வந்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த வகையில் வட மேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவின் வேட்புமனுவில் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற அநீதியை நினைத்து நான் பெரிதும் வருந்துகிறேன். காரணம் இவர் ஒரு மாகாண சபை உறுப்பினராக இருந்து இந்த மாவட்டத்திற்கு முடியுமான சேவைகளை செய்துள்ளார். அதிகமான கிரமாங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை வைத்துவந்தவர் என்பதையும் நான் அறிவேன். ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் நான் அவரிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் “ரிஸ்வி” நீங்கள் இது தொடர்பாக கவலைப்பட வேண்டியதில்லை உங்களுக்கு அரசியலில் எதிர்காலத்தில் முன்வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. இது உங்களது அரசியல் பயணத்தில் ஏற்ப்பட்ட ஓரு சிறிய பின்னடைவுதான் எந்த சந்தர்ப்பத்திலும் நான் உங்களுக்கும் இந்த மாவட்ட முஸ்லிம்களுக்கும் ஓத்துழைப்பேன். எனவே வருகின்ற பொது தேர்தலில் நீங்கள் எல்லோரும் ஐக்கிய தேசிய கட்சியை முழுமையாக ஆதரியுங்கள் இதன் மூலமாக மஹிந்த ராஜபக்ஷாவின் மீள்வருகைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனக்கு இந்த மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் கடந்த காலங்களில் அதிகம் அதிகம் ஒத்துழைப்பு வளங்கியுள்ளார்கள் அதை இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூற விரும்புகிறேன் என்றார் இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை முன்னால் உறுப்பினர் அலவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.