GuidePedia

பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதியுடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்
இதற்கிடையில் ஆகஸ்ட் 2 மற்றும் 9 ஆம் திகதிகளில் வாக்காளார் அட்டை விநியோகத்திற்கான விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரோஹன அபேரத்தன தெரிவித்துள்ளார்
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாத வாக்காளர் ஒருவர் குறித்த காலப்பகுதியில் ஆள்அடையாளத்தை நிரூபித்து அண்மித்த தபால் அலுவலகத்தில் தேர்தல் தினம் வரை வாக்கட்டைகள் பெற்றுக் கொள்ள முடியும் என தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்
தேர்தல்கள் செயலகத்திடமிருந்து நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக வாக்காளர் அட்டையை தாம் கையேற்றதாகவும் தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார் .
இதேவேளை எதிர்வரும்பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையடல் ஒன்று இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்ல்கள் செயலகத்தில் இன்று இடம் பெறவுள்ளது .
உதவித் தேர்தல்கள் ஆணையாளர்,பிரதி தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆகியோர் இடையே இந்த கலந்துரையடல் இடம் பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் தெரிவித்துள்ளார் .
தேர்தல் சட்டங்களை மாவட்ட ரீதியில் நடைமுறை படுத்தும்போது முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார் .



 
Top