GuidePedia

சொத்து விபரங்களை வெளியிடும் நடவடிக்கைகள் மந்தகதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

சொத்து விபரங்களை வெளியிடாத வேட்பாளர்களுக்கு வேட்பாளர் அடையாள அட்டைகள் வழங்கப்படாது எனவும் அறிவித்துள்ளார்.

எனினும் சொத்து விபரங்களை வெளியிடுவதில் வேட்பாளர்கள் அசமந்தப் போக்கை தொடர்ந்தும் பின்பற்றி வருவதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

55 முதல் 60 வீதமான வேட்பாளர்களே இதுவரையில் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

கண்டி, நுவரெலியா, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் 60 வீதத்திற்கும் அதிகமான வேட்பாளர்கள் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

மாத்தறை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இதுவரையில் 50 வீதத்திற்கும் குறைவான வேட்பாளர்களே சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகளில் ஜனசெத்த பெரமுன கட்சியின் வேட்பாளர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு வீதம் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.



 
Top