GuidePedia

எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் திகாடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் இன்று மாலை சம்மாந்துறையில் இடம்பெறவுள்ளது.

அம்பாறை வீதியிலுள்ள விளினையடி சந்திக்கும் அஷ்ரப் வட்டைக்கும் இடையில் அமைந்துள்ள வுஏளு மோட்டார் சைக்கிள் கம்பனியின் அருகாமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இப்பிரசாரக் கூட்டத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-எம்.யூ.எம்.றுமைஸ்-



 
Top