GuidePedia


கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வியாபார நிலையமொன்றில் தீப்பரவியுள்ளது. 

நேற்றிரவு பென்சி பொருட்கள் (Fancy goods) விற்பனை செய்யும் கடைத்தொகுதி ஒன்றில் பரவிய தீயினால் 06 விற்பனை நிலையங்கள் முற்றாக அழிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பிலும் இதுவரை மதிப்பிடப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன் இந்த தீ பரவலினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



 
Top