GuidePedia

மிக்- 27 விமானக்கொள்வனவு ஊழல் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வழங்கியுள்ள விளக்கத்தை பொலிஸ் மோசடி தவிர்ப்பு பிரிவு நிராகரித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அனைத்து ஆவணங்களும் கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கோத்தபாய குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மோசடி தவிர்ப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் தமது விசாரணைகளில் பல உண்மைகள் வெளிப்பட்டுள்ளதாகவும் எனவே விசாரணைகள் தொடரும் என்றும் பொலிஸ் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே விமான கொள்வனவின் போது பல மில்லியன் டொலர்கள் ஊழல் செய்யப்பட்டமையும் இதற்காக கோத்தபாய குழுவினர், வெறும் 28 ஆயிரம் சனத்தொகையை கொண்ட பிரிட்டிஸ் வேஜினியா தீவில் வங்கிக்கணக்கொன்றை திறந்து அதன் மூலம் பணபரிமாற்றம் செய்தமையும் தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



 
Top