GuidePedia

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த இரண்டினதும் தலைவராக திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய பதவிகளில் மாற்றங்களைச் செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிர்வாக செயலாளர் எஸ்.எச். ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க கொள்கைகளை கட்சியில் மீளவும் அமுல்படுத்த ஜனாதிபதி விரும்புகின்றார்.
கட்சியை முழுமையாக தூய்மைப்படுத்த தேர்தலின் பின்னர் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினை கூட்டுவது குறித்து இதுவரையில் எனக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை.
தேர்தலுக்கு முன்னதாக மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் கிடையாது.
இதன் காரணமாகவே ராஜித சேனாரட்ன, ஹிருனிகா பிரேமசந்திர, அர்ஜூன ரணதுங்க, எம்.கே.டி.எஸ். குணவர்தன மற்றும் எஸ்.பி. நாவீன்ன ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை மத்திய குழுவின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இடைநிறுத்தியுள்ளார் என ஆரியரட்ன சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.



 
Top