GuidePedia

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எத்தனோல் தொகையை விட தற்போதைய அரசாங்கம் கடந்த 6 மாதங்களில் அதிகளவான எத்தனோலை இறக்குமதி செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எத்தனோல்கார்கள் பற்றி கூறி மகிந்த ராஜபக்ச மீது குற்றம் சுமத்தும் ரணில் விக்ரமசிங்கவின் எத்தனோல் எதிர்ப்பு அரசாங்கம் இவ்வாறே செயற்பட்டு வருகிறது.
அரசாங்கத்தின் 100 நாட்கள் 100 பொய்களாக மாறியுள்ளன. எத்தனோல்காரர்களை கூறி ஐக்கிய தேசியக் கட்சி மகிந்த ராஜபக்ச மீது குற்றம் சுமத்துகிறது.
2013 ஆம் ஆண்டு 10.5 மில்லியன் லீட்டர் எத்தனோல் இறக்குமதி செய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டு 13.4 மில்லியன் லீ்ட்டர் எத்தனோல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் கடந்த 6 மாதங்களில் மாத்திரம் தற்போதைய அரசாங்கம் 11.28 மில்லியன் லீட்டருக்கும் அதிகமான எத்தனோலை இறக்குமதி செய்துள்ளது.
எமது ஆட்சிக்காலத்தில் ஒரு வருடத்தில் இறக்குமதி செய்த எத்தனோலையை இவர்கள் 6 மாதத்தில் இறக்குமதி செய்துள்ளனர்.
அதேவேளை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவை பெற்றவரை பிரதமராக நியமிக்க வேண்டும். எமது ஜனாதிபதி அந்த சட்டத்தை மதித்து மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்குவார் என நாங்கம் நம்புகிறோம் என டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.



 
Top