GuidePedia

மடகாஸ்கர் அருகே இந்திய பெருங்கடலில் கிடைத்த பொருள் காணாமல் போன மலேசிய விமானத்தின் உதிரி பாகமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சினாவின் பீஜியிங் சென்ற MH 370 விமானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணாமல் போனது.
இதை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. எனினும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தது.
இந்நிலையில் இந்திய பெருங்கடலில் உள்ள மடகாஸ்கர் அருகே உள்ள குட்டி தீவான ரீயூனியன் அருகே விமானத்தின் உடைந்து போன இறக்கை ஒன்று கிடைத்துள்ளது.
இது காணாமல் போன மலேசிய விமானத்திற்கு சொந்தமானதான இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே காணாமல் போன விமானத்தின் சீரியல் எண்ணை வைத்து இதை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த பொருள் பல நாட்களாக தண்ணீரில் சிப்பியால் மறைக்கப்பட்டு இருந்ததாக இதை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவு பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமானது என்பதால் அந்நாட்டு பொலிசார் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இவை காணாமல் போன விமானத்தின் பாகங்கள்தானா என்பது 100% இன்னும் உறுதி செய்யப்படவில்லை.



 
Top