GuidePedia

(க.கிஷாந்தன்)

நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியில் பலமான ஒரு அணி இந்த பொது தேர்தலில் போட்டியிடுகின்றது என ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.

26.07.2015 அன்று நுவரெலியாவில் நடைபெற்ற ஜக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தோட்டப்புறங்களில் வாழும் மக்களுக்கு குறிப்பாக 100 வருடத்திற்கு மேல் வாழ்ந்து வந்த தொழிலாளர்களின் லயன் அறைகளை அழித்துவிட்டு தனித்தனி வீடுகளை கட்டிக்கொடுப்பேன் என பிரதமர் ரணில் கூறினார்.

அந்தவகையில் அவர் கூறியது போல் இந்த தனித்தனி வீடுகள் 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக அமுல்க்கு வந்துள்ளதை நாம் அறிவோம்.

நாம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணகருத்தாகும்.

இந்த பொது தேர்தலின் பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் புதிய ஆட்சியை உருவாக்கும் போது நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

இன்று சொந்த வீடு கட்டி கொடுப்பதற்கு 7 பேர்ச் காணி கொடுக்கப்படுகின்றது. இந்த வீடுகளை கட்டிப்கொடுப்பதற்கான நிதி உதவிகளும் பெற்றுகொள்ளும் வகையில் எமது திட்டம் அமைந்து இருக்கின்றது.

எதிர்காலத்தில் எமது தோட்டங்களை பாதுகாக்க வேண்டுமானால் பழைய தேயிலைகளை புதுப்பிக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் இந்த தேயிலைகளை புதுப்பிக்க முன்வந்து எம்முடன் செயல்பட வேண்டும் என்பது என்னுடைய திட்டமாகும்.

இந்த திட்டத்தை பிரதமர் ரணி் விக்கிரமசிங்கவிடம் பேசி நாம் முன்வைப்பதற்கு தயாரக இருக்கின்றோம்.

நமது சமூகமும் ஒரு படித்த சமூகமாக எதிர்காலத்திற்கு முகங்கொடுக்க கூடிய உயர் தொழில்களுக்கு செல்ல கூடியளவில் நமது சமூகம் மாற வேண்டும் என்பதே ஜக்கிய தேசிய கட்சியின் திட்டமாகும்.

தொடர்ந்து தொழிலாளர்கள் தோட்டங்களிலேயே வேலை செய்யும் நிலை மாறி உயர் நிலைக்கு செல்ல கூடிய நிலைமையை ஜக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே உருவாக்க முடியும் அந்த செயல்பாட்டை முன்னெடுத்து செல்வதற்கு ஜக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்பதோடு நுவரெலியா மாவட்டத்தை ஒரு சுபீட்சமான மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றார்.



 
Top