பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரசார கூட்டம் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பல்வேறு தோட்டப் பிரதேசங்களுக்கு தொழிலாளர்களை சந்திக்கும் முகமாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மக்களுடன் நேரடியாக கலந்தரையாடினார். அந்தவகையில் கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் தனித்து சேவல் சின்னத்தில் இ.தொ.கா போட்டியிடுவதோடு அதேவேளை நுவரெலியாவில் மாத்திரம் வெற்றிலை சின்னத்தில் மூன்று வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கண்டி, ரங்கலää பன்வில ஆகிய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய இ.தொ.கா பொதுச்செயலாளரும் வேட்பாளருமான ஆறுமுகன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம்முறை ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலானது மலையக மக்களின் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை முன்னோக்கி செல்லக்கூடியதாக அமையவேண்டும். அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிரிசேன அவர்களுடன் இணைந்து இ.தொ.கா பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்தே தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது.
கூட்டு ஒப்பந்தத்தின் சம்பளப் பிரச்சினை முடிவு எட்டபடாத நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன என்று நீங்கள் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது நான்கு பெருந்தோட்ட கம்பனிகளும் இக் கூட்டுஒப்பந்ததிற்கு 1000 ரூபாய் சம்பள கொடுப்பனவுக்கு முன்வந்த போதிலும் சில மலையக அரசியல்வாதிகளின் சதியினால் இது தேர்தல் காலம் என்று இடைநிறுத்தப்பட்டது. இக்காலங்களில் இ.தொ.கா கூறியவாறு தொழிலாளர்களுக்கான சம்பளத்தினை பெற்றுக்கொடுத்துவிட்டால் நடைபெறவிருக்கும் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அமோக வெற்றியை பெற்றுவிடும் அச்சத்தில் எதிர்தரப்பினர் சம்பள வேதனத்திற்கான பேச்சுவார்த்தையை இடைநிறுத்தியுள்ளனர். எவ்வாறாயினும் தேர்தலின் பின்னர் 1000 ரூபா சம்பளத்தை இ.தொ.காவின் அமோக வெற்றிகளால் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய இ.தொ.கா பொதுச்செயலாளர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை கிராமங்களாக அமைத்து பொருளாதாரம்ää கல்விää சுகாதாரம்ää சொந்தகாணிää தனக்கென ஒரு சொந்த காலில் நின்று தனியாக செயல்படுவதற்குறிய அனைத்துவிதமான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல்.
அதேபோன்று அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நீண்ட நாள் கனவுகளின் ஒன்றான எமது சமூகம் கல்வி ரீதியிலும்ää தொழில்நுட்ப அடிப்படையிலும் முன்னோக்கி செல்வதற்காக பல்கலைகழகம் ஒன்றினை அமைத்தல். ஓவ்வொரு தோட்ட பகுதிகளுக்கும் கிராம உத்தியோகஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கி குறித்த தோட்டங்களுக்கு கடமையில் ஈடுபட நியமனம் வழங்கப்படும். இன்னுமாக 3000 உதவி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் 2 வருடகாலத்தில் ஆசிரியர் பயிற்சியில் முழுமைப் பெற்றபின் அவர்களுக்கு உயர் சம்பளத்துடன் நிரந்தர ஆசிரியர் பதவியை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்ததோடு பதுளையிலும் ஆசிரியர் பயிற்சி கல்வியற் கல்லூரியை அமைக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இ.தொ.கா தலைவரும் வேட்பாளருமான முத்து சிவலிங்கம் கருத்து தெரிவிக்கையில் இதுவரைக் காலம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 75 வருடங்களை எட்டியுள்ளது. மலையக வரலாற்றில் இ.தொ.கா வை எவராலும் இழிவுப்படுத்த முடியாது. எமது சமூகங்களுக்கு அனைத்து விதமான உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுத்தமையில் எவ்வித ஐயமுமில்லை. இம்முறை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் நாங்கள் மூவரும் களமிறங்கியுள்ளோம். எமது சமூகம் சிந்தித்து செயல்பட்டு தீர்க்க தரிசமான தீர்மானத்தை நடைபறவிருக்கும் தேர்தலின் மூலம் எடுத்துக்காட்ட வேண்டும். இ.தொ.காவின் வெற்றி என்பது எமது மலையகத்தின் அனைத்துள்ளங்களின் வெற்றியாகும்.
இந்த தேர்தலானது அதிகப்படியான மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு செல்லக்கூடியதாக அமையும். இனிவரும் காலங்களில் நுவரெலயா மாவட்டம் தொகுதிவாரி அடிப்படையில் 2 பிரதிநிதிகளே பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுவர். ஆகவே இம்முறை தேர்தலில் இ.தொ.காவின் பலம் முழு மலையகத்திற்கும் வேண்டுமென தலைவரின் உரையில் தெரிவித்தார்.
ஊடகப் பிரிவு
இ.தொ.கா