GuidePedia

(க.கிஷாந்தன்)
அட்டன் பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பால் நிலையத்தை மறைத்து தற்காலிமாக அமைக்கப்பட்ட வியாபார கடையை பொலிஸார் அகற்றியுள்ளனர்.
அட்டன் டிக்கோயா நகரசபையால் அட்டன் நகரில் பொது மக்கள் நடமாடும் பாதையில் வேறு இடங்களிலிருந்து வியாபாரம் செய்ய வரும் வர்த்தகர்களுக்கு தற்காலிகமாக கடைகளை அமைப்பதற்கு அனுமதியை கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அனுமதியை வைத்து அட்டன் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள மில்கோ நிறுவனத்திற்கு சொந்தமான பால் நிலையத்தை மறைத்து வியாபாரம் செய்வதற்கு அமைக்கப்பட்ட கடை தொகுதியை அட்டன் பொலிஸார் விசாரணையின் பின் அகற்றியுள்ளனர்.
மேற்படி பால் நிலையத்தை மறைத்து அமைக்கப்பட்ட கடை தொகுதியினால் பால் நிலையத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றதாக வாடிக்கையாளர்கள் பொலிஸாருக்கு குற்றம்சுமத்தியதையடுத்து பொலிஸார் இவ்வாறு அகற்றியுள்ளனர்.
குறித்த கடைகளை அகற்றுவதை ஊடகத்திற்கு பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளருக்கு அட்டன் டிக்கோயா நகரசபையில் பணிபுரியும் ஒருவரினால் பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகைக்காக அட்டன் நகரிற்கு வரும் மக்களுக்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சில கடைகளினால் பல இடையூறுகள் ஏற்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.











 
Top