GuidePedia

பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்படும் ஓர் விடயம் ஜலதோஷத்தின் போது ஏற்படும் மூக்கடைப்பு.
இதனால் பேசவும் முடியாத நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் இதை சரிசெய்ய உப்பு மருந்தாக விளங்குகிறது.
வெண்ணீர் கலந்த உப்பு
தண்ணீரை நன்கு வேக வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் சிறிது உப்பை போட்டு, அதை நன்கு கலக்கி கொள்ளவும்.
பின்பு அதனை மூக்கின் அருகில் வைத்து ஆழமாக உறிஞ்ச வேண்டும். அந்த நீரவி மூக்கினுள் பரவி வேண்டும்.
இதன் மூலம் மூக்கடைப்பு எளிதாக நீங்குவதுடன், ஜலதோஷத்தை கட்டுப்படுத்த முடியும்.
உப்பின் பயன்கள்
நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பைப் போட்டு சுடவைத்தால் நெய் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
மண்ணெண்ணெயில் சிறிது உப்பு கலந்து விளக்கேற்றினால் மண்ணெண்ணெய் சீக்கிரம் தீராது.
அரிசியை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கும்போது சிறிது உப்புத் தூளையும் கலந்துவிட்டால் புழு, பூச்சி வராமல் பாதுகாப்பாக இருக்கும்.
துருப்பிடித்த சாமான்கள் மீது உப்பு தேய்ப்பின் துரு நீங்கி பளபளக்கும்.
வீட்டில் தரை கழுவும்போது, சிறிது உப்பையும் நீரில் கலந்து கழுவினால், காய்ந்த பிறகு தரையில் ஈக்கள் மொய்க்கும் தொல்லையிராது.




 
Top