GuidePedia

இலங்கையில் ராஜபக்ச என்ற பெயரைக் கூறினால் பணம் கிடைக்கும் என்ற தோற்றப்பாடு வேகமாக உருவாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சமுதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரின் பெயர்களை பயன்படுத்திபொதுமக்களிடம் இருந்து பணம் பெற்ற 373 சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.
இது தொடர்பில் 143 பேரை பொலிஸார் கைது  செய்துள்ளனர்.
இதில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமாக முதல் பெண்மணி ஷிராந்தியின் வாகன சாரதி என்ற தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர்அரச பணியை பெற்று தருவதாக கூறி ஒருவரிடம் 190000 ஆயிரம் ரூபாவை பெற்றமை கண்டுப்பிடிக்கப்பட்டது.
வரக்காபொலையில் பெண் ஒருவர் ஷிராந்தியின் ஆலோசகர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு 1.6 மில்லியன் ரூபாய்களை ஒருவரிடம் இருந்து பெற்றுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்தவின் நண்பர் என்று அடையாளப்படுத்திய ஒருவர்ரஷ்யரிடமிருந்து  69000 டொலர்களை பெற்றுள்ளார்.
ஜனாதிபதி ராஜபக்சவின் உத்தியோகபூர்வ யானை விநியோகஸ்தர் என்று கூறி ஒருவர்மியன்மாரில் இருந்து குட்டி யானை ஒன்றை தருவிக்க 3.3 மில்லியன் ரூபாய்களை முற்பணமாக செலுத்தியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலுள்ள ஜனாதிபதியின் மாமாவை கொண்டுகுறைந்த விலைக்கு வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறிய பெண் ஒருவர்இன்னொருவரிடமிருந்து பெருந்தொகை பணத்தை பெற்றுள்ளார்.
ஷிராந்தியின் ஊடகப்பிரிவு என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட பெண் ஒருவர் இரண்டு இலட்சம் ரூபாவை ஏமாற்றியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் அமைப்பாளர் என்றுக்கூறிய ஒருவர்நுகேகொடையில் பல இலட்சம் ரூபாய்களுக்கான போலி காசோலைகளை வழங்கி பொருட்களை பெற்றுள்ளார்.
இதனை தவிர ஏராளமான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
இந்தநிலையில் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று வருட சிறைத்தண்டனை கிடைக்கும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.



 
Top