(ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்,
யாரையும்
ஆதரிக்கும் தீர்மானத்திற்கு இன்னும் வரவில்லை. தலைவர் கடந்த இரண்டு தினங்களாக
நாட்டில் இல்லாத சூழ்நிலையில், கட்சியின் உயர்பீடம் கூடி முடிவெடுக்காத
சூழ்நிலையில், ஆதாரமற்ற செய்திகளினூடாக,
இன்றைய
ஜனாதிபதியையே ஆதரிக்கப் போவதாக வெளிவந்துள்ள செய்தி எந்தவித அடிப்படையும் அற்றதாகும்.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் தேர்தலில் எடுக்கப்போகும் தீர்மானம்,
இந்த
நாட்டில் பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தப் போகிறது என்பதை அறிந்திருக்கும்
பெரும்பான்மை விசமிகளும், அவர்களின் ஏஜண்டுகளும்,ஊடக
தர்மத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு அரசியல் விபச்சாரம் செய்யும் சில ஊடகங்களுமே
இவ்வாறான பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றன.
இச்செய்திகளை
மக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும், இவ்வாறான சதிமுற்சிகள்,
தேர்தல்
நெருங்க நெருங்க இன்னும் அதிகரிக்கும் அபாயமிருப்பதால்,
அவை
தொடர்பில் மிக அவதானத்தோடு இருக்குமாறு போராளிகளையும் பொதுமக்களையும் அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன். ஏதாவது இது தொடர்பான விடயங்களில் தெளிவோ அல்லது விளக்கமோ
தேவைப்படின் எனது முகநூல் மூலமோ, தொலைபேசி மூலமோ என்னை தொடர்பு கொள்ளுங்கள்
எனவும் அறியத்தருகிறேன்.