GuidePedia

(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தாவரவியல், ப10ங்கா மற்றும் பொழுதுபோக்கு பிரதி அமைச்சர் பதவி ஜனாதிபதி அவர்களால் அண்மையில் வழங்கப்பட்டது. இதனையொட்டி தலவாக்கலை கதிரேசன் கோவில் மண்டபத்தில் மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று வரவேற்பு இடம்பெற்றது.
இதன்போது தலவாக்கலை நகரத்திலிருந்து பேரணியாக வீ.இராதாகிருஷ்ணன் கதிரேசன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்போது ஊடகங்களுக்கு பிரதி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில்…..
மலையக மக்களுக்கு அதிமேகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதிகளவில் பல அபிவிருத்திகள் செய்திருக்கின்றார். இதனால் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார். மலையகத்திற்கு செய்ய வேண்டிய இன்னும் சில அபிவிருத்தி திட்டங்களை ஜனாதிபதியின் கவனத்திற்கொண்டு வந்து தனது கட்சியின் ஆதரவை தெரியப்படுத்தவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர். இராஜாராம், அரசியல்துறை முக்கியஸ்தர்களும், பிரதேச சபை மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.









 
Top