GuidePedia

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் காலத்தில் எக்காரணம் கொண்டும் பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள மாட்டார் எனவும், ஜனாதிபதித் தேர்தல் முடிந்து சில நாட்களுக்குப் பின்னர் விஜயம் இடம்பெறவுள்ளதனால்  பரிசுத்தப் பாப்பரசரின் இலங்கை விஜயத்தில் மாற்றங்கள் எதுவும் இல்லையெனவும் வத்திக்கான் காரியாலயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் வரையில் பரிசுத்தப் பாப்பரசரின் விஜயம் குறித்து உறுதிப்படுத்தப்பட்டிருக்க வில்லையெனவும் அரசாங்க செய்தி வட்டாரங்கள் அறிவித்திருந்ததாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் வரை பாப்பரசரின் இலங்கை விஜயம் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 
Top