GuidePedia

(சத்தார் எம் ஜாவித்)
கடந்த மூன்று தஸாப்த கால ஆயுதப் போராட்டத்திற்குப்  பின்னரான வடமாகாணத்தில் மீள்குடியமர்வு, அபிவிருத்தி என்பனவற்றை மக்கள் பூரணமாக பெறுவதை ஆவலாகக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் வடமாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் குழப்ப நிலைமைகளை தோற்றியுள்ளததைக் காணக் கூடியதாகவுள்ளது.
வடமாகாணத்தைப் பொருத்தவரையில் அம்மக்கள் எதிர் பார்ப்பதெல்லாம் யுத்த வடுக்களால் இழந்த வற்றை மீளப் பெறுவதே குறிப்பாக மீள் குடியேற்றம்,கல்வி, சுகாதாரம், வீடமைப்பு,அபகரிக்கப்படும் காணிகளை மீளப் பெறல், நிரந்த தொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எதிர் பார்த்தவர்களாக இருக்கின்றார்களே தவிர அவர்கள் தேர்தல்களை எதிர்பார்க்கவில்லை.
ஆனால் இன்று அரசினால் பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டாலும் மக்களின் பல அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்ற மக்களின் குற்றச் சாட்டுக்களுக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாக வைத்து பல அபிவிருத்தித் திட்டங்களை அரசு செய்து வருவதாகவும் அதன் ஒரு கட்டமே கடந்த வாரம் ஜனாதிபதியால் பல அபிவிருத்தித் திட்டங்கள் அரம்பித்து வைக்கப்பட்ட விடயமாகும் என வடமாகாண மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மூன்று தஸாப்பத யுத்த சு10ழ் நிலையின்போது  தட்டுத்தடுமாறி பல சொல்லொனாத் துயரங்களுக்கு முகங்கொடுத்த வடக்கு மக்கள் யுத்த வெற்றியின் பின்னர் தமக்கு நியாயம் கிடைக்கும் என்ற கனவுகளில் 5வருட காலத்தைக் கழித்தும் யுத்த வெற்றியின் பூரண பயன் தம்மை வந்தடைய வில்லை என்கின்றனர் மக்கள்.
பொதுவான பல அபிவிருத்திகள் இடம்பெறுகின்ற போதிலும் தமது உள்ளகப் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லை என்று தெரிவிக்கின்றனர்.
மேற்படி நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான முனைப்பு வடமாகாணத்தில் மேற்கொள்ளப் படுகின்றமை மக்கள் மத்தியில் சற்றுக் கவலையைத் தோற்றுவித்தாலும் தேர்தலில் மக்கள் தமது ஆதரவை அரசுக்கு வழங்குவார்களா? என்பதில் ஐயப்பாடுகள் இல்லாமலில்லை. எனினும் தேர்தல் என்பது ஒரு ஜனநாயக உரிமை அதனை உரிய முறையில் பயன்படுத்த வேண்டியது ஒவ்வொரு வாக்காளனினதும் கடமையாகும்.
ஆனால் தற்போது சிறுபான்மை மக்கள் தேர்தல் விடயத்தில் பலவாறு சிந்திக்க வேண்டியுள்ளது. காரணம் அவர்கள் இனவாதம்ää அபிவிருத்திää அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் தற்போது பாதிக்கப்பட்டு பின்னடைவு நிலைமையினைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தவகையில் பார்க்கும்போது தமது இலக்குகளை அடையக் கூடிய அரசியல் தலைமைகளைத் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
கடந்த. காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களின் போதேல்லாம் மக்களின் வாக்குகள் பெறப்பட்டதே தவிர அவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் புஷ்வானமான கதையாகவே அமைந்துவிட்டது இதற்கு நாட்டில் தலை தூக்கியுள்ள இனவாதச் செயற்பாடுகளும்ää அதனை முன்னெடுப்பவர்களும் கூட வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் போட்டுக் கொண்டு அம்மக்களின் முன்னேற்றத்திற்கு மறுப்புத் தெரிவித்துக் கொண்டுள்ளனர் என்றால் மறுப்பதற்கு இடமில்லை.
வடமாகாணத்தைச் சேர்ந்த சிறுபான்மைச் சமுகங்கள் குறிப்பாக 1990ஆம் ஆண்டு வடபுலத்தில் இருந்து விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையினர் இன்று வரை சுமார் 24 வருடங்களாக அகதிகளாக மீள் குடியமர்த்தப்படாது வடமாகாணத்திற்கு வெளியேயும்ää வடமாகாணத்திலும் இருக்கின்றமையுடன் அவர்களின் காணி உள்ளிட்ட பல பிரச்சினைகள் இன்றும் தீர்த்து வைக்கப்படாத நிலையில் அம்மக்கள் அரசியல் விளையாட்டுக்களின் மத்தியில் இரண்டுங்கெட்டான் நிலையில் தமது பூர்வீகத்தில் வாழ முடியாது இருக்கின்றர்.
வடமாகாண முஸ்லிம்களின் நூற்றிற்கு தொண்ணூறு வீதமான வீடுகள் அழிந்துபோயும்ää அம்மக்கள் வாழ்ந்த இடங்கள் எல்லாம் காடுகளாக காணப்படும் நிலையில் அவர்கள் மீளக் குடியமர முடியாத நிலையில் ஒரு விரக்தி நிலையில் இருப்பதனையும் காணக் கூடியதாகவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்காக வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத் திட்டங்கள் மூலம் அந்த மக்கள் அரசுக்கு ஆதரவு வழங்குவார்களா? என்பதனைவிட அந்த மக்கள் இதுவரை தமக்கு கிடைத்தவற்றை அல்லது அதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களையே எடுத்து நோக்கி செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று வடமாகாணத்தை எடுத்துக் கொண்டால் இலங்கையின் ஏனைய மாகாணங்களைப் போன்று அதிகாரம் பெற்ற ஒரு மாகாண சபையாக இருக்கின்ற போதிலும் வடமாகாணத்தின் நிருவாக நடவடிக்கைளுக்கான அதிகாரங்கள் வழங்கப்படாது முடக்கப்பட்ட நிலையில் எந்த அபிவிருத்தியையும் செய்ய முடியாத நிலையில் வடமாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளைக் கூட நிறைவேற்ற முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதை வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தமது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை போன்ற விடயங்கள் மக்கள் மத்தியில் பல விமர்சனங்களையும் கூட எற்படுத்தியுள்ளது.
தற்போது வடமாகாணத்தில் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கள்ää அரச அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்குதல்ää பாதைகளை அமைத்தல்ää அரச அலவலகங்களை திறந்து வைத்தல். யாழ் தேவியை யாழுக்கு ஆரம்பித்து வைத்தல் போன்ற விடயங்கள் மக்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பதனைவிட இவை தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளாகவும் அதன் மூலம் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் கைங்கரியங்களாகவும் அமைவதாக அம்மக்கள் விமர்சிப்பதைப் பார்க்கும்போது அவர்கள் மேற்படி விடயங்களில் ஆர்வம் அற்று விலகி நிற்கும் நிலைமைகளை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
யுத்தத்திற்குப் பின்னரான நிலையில் வடமாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் யார் தமக்கான கோரிக்கைளை நிறைவேற்றும் வகையில் குறிப்பாக 13வது அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத் முன்வருகின்றார்களோ அவர்களுக்குத்தான் தமது ஆதரவுகளை வழங்கும் நிலைமைகளே மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஆனால் மேற்படிக் கோரிக்கைகளை தவிர அதற்கு மேலாக எதனைத் திணித்து அரசு அவர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாது.
வடமாகாண மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு என்பது முக்கியமானதாகும். ஆரசியல் தீர்வு வழங்கப்படாததன்   ஆரம்பமே கடந்த மூன்று தஸாப்தகால கொடிய யுத்தத்திற்கு வழிகோலியது எனலாம்.
தமக்கான நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் வடக்கின் அரசியல் தலைமைகள் உறுதியாக இருப்பதுடன் அதிலும் 13வது திருத்தச் சட்டம் கட்டாயம் அமுல்படுத்தப்பட வேண்டும் அது ஏதாவது ஒரு வடிவில் தமது உரிமைகளை அனுபவிக்கவும்ää அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் வழி வகைகள் செய்யப்பட வேண்டும் என எதிர் பார்க்கின்றனர்.
வடமாகாணத்தில் மற்றுமொரு பிரச்சினை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கடந்த கால வன்செயல்களின் எதிரொலியாக பல நூற்றுக் கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இன்று வரை பல்வேறுபட்ட இன்னல்களுக்கு மத்தியில் நாட்டின் பல சிறைகளில் வாடிவருகின்ற நிலை அவர்கள் மத்தியில் பாரிதொரு தாக்கத்தை எற்படுத்தியுள்ளது.
அரசியல் சிறைக் கiதிகளின் விடுதலையில் தமிழ் சமுகம் மட்டுமல்லாது மனித உரிமைகள் அமைப்புக்கள்ää சர்வதேச நிறுவனங்கள்ää சமுக ஆர்வளர்கள்ää சமாதான விரும்பிகள்ää சமய அமைப்புக்கள் என பலதரப்பட்ட வகையிலும் அவர்களின் விடுதலைக்கான அழுத்தங்களைக் கொடுத்து வருவதனையும் அரசு சற்று உள்வாங்க வேண்டியதும் முக்கியமானதாகும்.
தற்போது வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளைவிட அம்மக்களின் அரசியல் கைதிகளின் விடுதலை என்பதும் மிக முக்கியமானதாகும். சாதாரண குற்றக் கைதிகளையாவது விடுவதற்கு அரசு முன்வராத போது அந்த மக்கள் ஏனைய விடயங்களில் எவ்வாறு நாட்டங் கொள்வர்? என்ற கேள்விக்கும் உறுதியான பதில் காண வேண்டியுள்ளது.
அபிவிருத்திகளை மட்டும் முன்னெடுத்து அம்மக்களின் மனங்களை மாற்ற முயலும் செயல்கள் வெற்றியை அளித்து விடாது. வடக்கில் யுத்தத்திற்குப் பின்னர் இடம் பெற்ற தேர்தல்களில் மக்கள் அபிவிருத்திக்கு மயங்காது அவர்கள் தமது அரசியல் தீர்விற்கான எத்தனிப்பில் இருந்து வருகின்றமையை கடந்தகால வடக்கின் தேர்தல்களின் முடிவுகள் காட்டியுள்ளன.
வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை இனங் கண்டு அவர்கள் விரும்பும் வகையில் தீர்வுகான முயல்வதற்கும்ää இந்த நாட்டின் சிறுபான்மைச் சமுகங்கள் எதிர் பார்க்கும் 13வது அரசியல் திருத்தச் சட்ட அமுலும் அதன் விடயங்களும் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதனையும் தற்போதைய ஆட்சியாளர்கள் குறிப்பாக ஜனாதிபதி கவனஞ் செலுத்த வேண்டும்.
வடமாகாண மக்களைப் பொருத்தவரையில் தேர்தலுக்கு மேலாக தமது உரிமைகளையும்ää சலுகைகளையும் பெற்றுக் கொள்வதிலே முனைப்பாகவுள்ளனர். அதனைப் பெற்றுக் கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தி வாக்குக் கேட்பதே வெற்றிக்கான வழியாகும்.
எனவே தேர்தலுக்காக அபிவிருத்தி என்பதனை மாற்றி மக்கள் நலன்களுக்காகவும்ää அபிவிருத்திக்காகவும் என்ற தேர்தல் முன்னெடுப்புக்களே மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டும் அதனையே மக்கள் ஏற்றுக் கொள்ளவர். அந்த யுகத்திற்கான பாதையையே அரசியல் தலைமைகள் கண்டு கொள்ள வேண்டும்.



 
Top